சீன அமரிக்க உறவு குறித்து இறுதியாக நடைபெற்ற அமரிக்க ஜனாதிபதித் தேர்தல் விவாதங்களில் காரசாரமாகப் பேசப்பட்டது. அமரிக்காவிற்குப் போட்டியாக உலகம் முழுவதும் தனது மூலதனச் சுரண்டலை திணிக்க முயலும் சீன முதலாளித்துவம் குறித்து அமரிக்கா அச்சம் கொண்டிருக்கிறது.ஒபாமா சீனாவின் பொருளாதார ஆதிக்கத்தை மட்டுப்படுத்துவது குறித்துப் பேசிய அதே வேளை ரோம்னி சீனாவின் நாணய மதிப்பைக் குறைப்பதற்கும் வரி அறவிடுவதற்கும் திட்டங்கள் முன்வைத்திருப்பதாகக் கூறினர். இன்று சீனவின் இந்தியாவுடனான அணி சேர்க்கையே அமரிக்காவிற்கு உடனடியான அச்சம் தரும் நடவடிக்கை எனவும் அதற்கு எதிரான நடவடிக்கைகளையே அமரிக்கா பிரதானப்படுத்தியிருப்தாகவும் பிரஞ்சு ஆய்வாளர் ஜெரா டொமினில் கருத்துத் தெரிவித்துள்ளார்.
தீபெத் மற்றும் இலங்கை ஆகியன இன்றைய சர்வதேச அதிகார வர்க்க அரசியலின் ஆடுகளம் என்பதற்கான அறிகுறிகள் தெரிகின்றன.
அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கும் இந்த அதிகாரப் போட்டிக்கு எதிரான உலக மக்களுடனான இணைவு இன்று அவசியமாகிறது.