பதவியேற்றப் பின்னர் முதலாவது தொலைக்காட்சி செவ்வியை என்டிடிவிக்கு வழங்கியேோது ரணில் விக்கிரமசிங்க இவ்வாறு தெரிவித்தார்.
மஹிந்த ராஜபக்ச, இந்தியாவுக்கு எதிராக சீனாவையும் சீனாவுக்கு எதிராக இந்தியாவையும் வைத்து விளையாட எத்தனித்தார்.
எனினும் அதுவே அவருக்கு தடையாக வந்து விட்டது என்று குறிப்பிட்டார்.
ராஜபக்ச ஆட்சிக் காலத்தில் சீனா, இலங்கையில் 6 பில்லியன் டொலர்களை முதலீடு செய்துள்ளது.
இதில் இந்தியாவுக்கு தொல்லை தரக்கூடிய துறைமுகங்கள் மற்றும் விமான நிலையங்களும் உள்ளடங்குகின்றன.
இந்தநிலையில் அனைத்து வெளிநாட்டு ஒப்பந்தங்களும் உள்ளூரில் உள்ளவர்களுடன் செய்து கொள்ளப்பட்டமை தொடர்பில் விசாரணைகள் நடத்தப்படவுள்ளன.
இதன்போது சீனர்களே அல்லது வேறு நாட்டினரோ ஊழல்களில் ஈடுபட்டிருப்பார்களாயின், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் ரணில் குறிப்பிட்டுள்ளார்.
சீனாவினால் முன்னெடுக்கப்பட்டுள்ள 1.5 பில்லியன் டொலர்கள் செலவிலான போட் சிட்டி கொம்ப்லெக்ஸ் தொடர்பில் மீள்பரிசீலனை செய்யப்பட்டுள்ளது.
காரணம் இந்த திட்டம் ஆரம்பிக்கப்படும் முன்னர் சுற்றாடலை பாதிக்கக்கூடிய எந்தவொரு ஆய்வு தொடர்பிலும் கவனம் செலுத்தப்படவில்லை.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் கேள்வி எழுப்பியபோதும் எவ்வித பயன்களும் ஏற்படவில்லை என்று ரணில் குறிப்பிட்டார்.
இலங்கையின் மன்னார் கடலை நாசப்படுத்திய வேதாந்தா நிறுவனம், வெலிவேரியவில் அப்பாவி மக்களின் படுகொலைக்குக் காரணமான ஹேலிஸ் நிறுவனம், சுன்னாகத்தில் யாழ் குடா நாட்டின் ஒரு பகுதியையே அழிக்கும் எம்.ரி.டி வோல்கேஸ் நிறுவனம் ஆகியவற்றிற்கு எதிராக ரனில் விக்ரமசிங்க எதுவும் குறிப்பிடவில்லை. சீனாவின் பொருளாதாரத் தலையீட்டிற்கு எதிராக அமெரிக்க அடியாட்களால் நியமிக்கப்பட்ட ரனிலின் நோக்கங்களுக்கு ராஜபக்ச என்ற கொடூரமான சர்வாதிகாரியின் தவறுகள் வசதியேற்படுத்திக் கொடுத்துள்ளன.