Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனாவும், இந்தியாவும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடர்பான முடிவுகளை நிர்ணயிக்கும்?

பாகிஸ்தான் ஹைதராபாத் நகரில் செய்தியாளர்களிடம் பேசிய ஐ.நா.விற்கான பாகிஸ்தானின் தூதர்அப்துல்லா ஹாரூன், “சீனா, இரஷ்ய ஆதரவு பெற்று நிரந்தர உறுப்பினராக ஆனாலும், வீட்டோ அதிகாரமற்ற இந்தியாவால் பாகிஸ்தானிற்கு எந்த அச்சுறுத்தலும் இருக்காது” என்று கூறியுள்ளார்.

பாகிஸ்தானை பயங்கரவாதத்திற்கு எதிரான போரில் தங்களது நண்பன் என்று நாளும் கூறிக்கொள்ளும் அமெரிக்கா, ஐ.நா.பாது.பே.யின் நிரந்தர உறுப்பினராக ஆதரவு அளிக்கும் என்ற செய்தி  சலசலப்புகளை ஏற்படுத்தியதன்  பின்னணியிலேயே இக்கருத்துக்கள் தெரிவிக்கப்பட்டன.

 அப்துல்லா ஹாரூன், பாகிஸ்தான் தன்னிடம் உள்ள வளங்களை சாதுரியத்துடன் பயன்படுத்தி, நாட்டில் நிதிச் சமநிலையை ஏற்படுத்திட வேண்டும் என்றும், இதை செய்யத் தவறினால், தெற்காசியாவில் பொருளாதார சக்திகளாக உருவாகிவரும் சீனாவும், இந்தியாவும் எதிர்காலத்தில் பாகிஸ்தான் தொடர்பான முடிவுகளை நிர்ணயிக்கும் சக்திகளாக ஆகிவிடும் என்று எச்சரித்துள்ளார்.

Exit mobile version