மும்பையில் செய்தியா ளர்களிடம் பேசிய அவர், அருணாச்சலப்பிரதேசம் தொடர் பாக இந்தியாவுக் கும், சீனாவுக்கும் இடையே பிரச்சனை நிலவுவதாக விஷமத்தனமாக பிரச்சாரம் செய்யப்படுவதாக கூறியுள்ளார்.அருணாச்சலப்பிரதேசத்தை சீனா ஆக்கிரமித்துள்ளதாக வெளியாகி உள்ள செய்தி கள் அடிப்படை ஆதாரமற் றவை என்றும் சிதம்பரம் தெரிவித்தார்.ஜம்மு–காஷ்மீர் மாநி லத்தை மற்ற மாநிலங்க ளோடு ஒப்பிட முடியாது என்று கூறியுள்ள சிதம்ப ரம், அங்கு நிலவும் பிரச் சனைக்கு தனித் தீர்வு காணப்பட வேண்டும் என் றும் அதற்கான நடவடிக் கையில் மத்திய அரசு ஈடு பட்டுள்ளதாகவும் தெரிவித் துள்ளார்.தீவிரவாதிகள் ஆயுதங் களை கைவிட்டு பேச்சு வார்த்தைக்கு முன்வர வேண் டும் என்றும் அவர் வேண்டு கோள் விடுத்தார்.இந்தியா–சீனா இடையே பிரச்சனை நிலவுவதாக ஊடகங்கள் தொடர்ந்து பிரச்சாரத்தில் ஈடுபட்டு வரு கின்றன. இருதரப்பு எல் லைப்பிரச்சனை குறித்து பேச்சுவார்த்தை மூலம் தீர்வு காண்பதற்கான நடவடிக் கை தொடர்ந்து மேற்கொள் ளப்பட்டு வரும் நிலையி லும், அதை ஊடகங்கள் முன்னிறுத்த மறுக்கும் நிலையில், அமைச்சர் சிதம் பரம் மேற்கண்டவாறு கூறி யுள்ளார்.