09.08.2008.
பெய்ஜிங் நகரில் அமெரிக்க தூதரகத்தின் கட்டிடத்தை அமெரிக்க ஜனாதிபதி புஷ் திறந்து வைத்தார். பின்னர் அவர் உரையாற்றிய போது, வளத்தையும் அமைதியையும் மேம்படுத்த பேச்சுரிமையும் மத சுதந்திரமும் சிறந்த வழிகள் என்று அவர் கூறினார்.
திறப்பு விழாவில் கலந்து கொண்ட சீனத் தலைவர்கள் நாகரிகம் கருதி மவுனம் காத்தனர்.
சீனாவில் பேச்சுரிமையும், மனித உரிமையும் மறுக்கப்படுவதாக
புஷ் வியாழனன்று தாய்லாந்தில் பேசினார். மேலும் சீனா தனது மனித உரிமை மீறல் பதிவுகளைக் குறைத்துக் கொள்ள வேண்டுமென்றும், மனித உரிமை ஆர்வலர்கள் மற்றும் எதிர்ப்பாளர்களைச் சிறையில் அடைத்தல் போன்றவற்றை எதிர்ப்பதாகவும் கூறினார்.
.
சீனாவில் மத சுதந்திரம் இல்லையென்று கூறுகிறார். ஆனால் அவருடைய நிகழ்ச்சி நிரலில் ஞாயிற்றுக்கிழமையன்று கிறிஸ்தவ ஆலயத்தின் ஆராதனையில் கலந்து கொள்கிறார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது. மத சுதந்திரங்கள் இல்லாத நாட்டில் ஆலயங்கள் இருக்க முடியாது.
சீனா பதிலடி
தாய்லாந்தில் புஷ் பேசிய முறைக்கு சீனா பதிலடி கொடுத்துள்ளது. சீனாவின் உள்நாட்டு விவகாரங்களில் தலையிடுவதை
புஷ் நிறுத்த வேண்டுமென்று சீன அயல்துறை செய்தித் தொடர்பாளர் க்யின் காங் கூறினார்.
மனித உரிமை, மத உரிமை மற்றும் இதர விஷயங்களை கூறிக் கொண்டு பிற நாடுகளின் உள் விவகாரங்களில் வார்த்தைகள் அல்லது செயல்கள் மூலம் தலையிடுவதை உறுதியாக எதிர்க்கிறோம் என்றும் அவர் கூறினார்.
சீன மக்களுக்கு மதச் சுதந்திரம் உண்டு என்பது மறுக்க முடியாத உண்மை என்றும் அவர் சொன்னார்.