Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனாவில் கம்யூனிச கட்டமைப்பின் எச்ச சொச்சங்களும் அழிக்கப்படுகின்றன

சீனக் கம்யூனிஸ்ட் கட்சி மக்களின் குறைந்தபட்ச உரிமைகளைக்கூட மறுத்து மிகவும் தீவிரமான முதலாளித்துவப் பாதையை தெரிவு செய்துள்ளதாக உத்தா பல்கலைக் கழகத்தில் உதவிப் பேராசிரிராகக் கடமையாற்றும் மின்கி லீ குற்றம் சுமத்துகிறார். மக்களுக்கு அடிப்படை வசதிகளை வழங்குவதற்கான குறைந்தபட்ச திட்டம் ஒன்றை முன்வைத்த சோங்கிங் மாநில கட்சிச் செயலாளர் போ சிலாய் போலிக் குற்றம் சுமத்திக் கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று கூறுகிறார்.

ஐரோப்பிய நாடுகளில் வழங்கப்படும் வேலையற்றோருக்கான உதவித்தொகை வழங்கும் திட்டம் சீனாவைப் பின்பற்றியே சீனாவின் செல்வாக்கை ஐரோப்பவிலும் அமரிகாவிலும் அழிப்பதற்காக 60 களில் ஆரம்பிக்கப்பட்டது. இன்று சீனாவின் மக்கள் அரசாங்கம் அழிக்கப்பட ஐரோப்பியத் தொழிலாளர்களின் உரிமைகளும் பறிக்கப்படுகின்றன.

Exit mobile version