Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனாஉடனான இலங்கையின் உறவு, இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை.

சீனா உடனான இலங்கையின் உறவு காரணமாக, இந்தியாவுக்கு எவ்வித அச்சுறுத்தலும் இல்லை என்று கருத்து தெரிவித்துள்ளது.

இலங்கையின் முன்னாள் வெளியுறவு அமைச்சருமான ரோஹித போகொல்லாகம அளித்துள்ள பேட்டியில்,

“சர்வதேச அரங்கில் எங்களுக்கு சீனா ஆதரவு அளித்து வருகிறது. போர்க் காலத்திலும், போருக்குப் பின்பும் பொருளாதார நடவடிக்கைகளில் நிபந்தனையற்ற ஆதரவை அளித்து வருகிறது.

அதேவேளையில், இந்தியா உடனான உறவுக்கு ஈடு ஏதுமில்லை. பயங்கரவாதத்துக்கு எதிரான நடவடிக்கைகளின்போது, இந்தியா பெரும் உதவிகளை செய்தது.

இந்தியா உடனான வர்த்தக உடன்பாடுகளால் இலங்கைக்கு நிறைய நன்மைகள் கிடைக்கிறது. இந்தியாவில் இருந்து ஆயிரக்கணக்கான சுற்றுலாப் பயணிகள் எங்கள் நாட்டு வந்து செல்கிறார்கள்.

சீனா உடனான இலங்கையின் உறவு வலுத்துள்ளதை, தெற்காசிய பிராந்தியத்தில் தமக்கு அச்சுறுத்தலாக இந்தியா கவலைப்படுவது தேவையற்றது என்று அந்தப் பேட்டியில் ரோஹித குறிப்பிட்டுள்ளார்.

அண்மைக்காலமாக, இலங்கையில் சீனா தனது இருப்பை அதிகப்படுத்தி வருவது, இந்தியாவுக்கு கவலை தரும் அம்சமாக பார்க்கப்படுகிறது.

Exit mobile version