Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீனப் பொருளாதாரமும் வீழ்ச்சியடைகின்றது

ஐரோப்பாவில் நடைபெற்று வருகின்ற குழப்பத்தின் காரணத்தினாலும் அமெரிக்கப் பொருளாதாரம் தொடர்ந்து பலவீனமடைந்து செல்லும் காரணத்தாலும், 2012 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் சீன வளர்ச்சியென்பது முந்தைய ஆண்டின் இதே காலத்துடன் ஒப்பிடுகையில் 8.1 சதவீதத்திற்குச் சரிவடைந்திருந்தது. இரண்டாம் காலாண்டில் இந்த எண்ணிக்கை 7 சதவீதத்திற்கும் கீழாய் சரியக் கூடும் என சர்வதேசப் பொருளாதாரப் பரிவர்த்தனைக்கான சீன மையம் என்கிற அரசாங்கத்தின் முன்னணி சிந்தனைக் குழாம் எச்சரிக்கை செய்திருந்தது.
சீனாவில் உற்பத்தி செய்யப்படுகின்ற மலிவு விலைப் பொருட்களுக்கான மிகப்பெரும் நுகர்வோராய்இருக்கும் ஐரோப்பிய நாடுகள் மீள முடியாத அமைப்பியல் பொருளாதார நெருக்கடிக்குள் சிக்கித் தவிப்பாதால் இந்த நிலை ஏற்பட்டுள்ளதாகக் கணிப்பிடுகின்றனர்.
ஏனைய நாடுகளைப் போன்று பொருளாதாரம் மிகப்பெரும் சிக்கலுக்கு உள்ளாகாமல் இருப்பதற்கு அதன் உள்ளகச் சந்தையும் காரணமாகும். இந்த நிலையில் இந்தியா, மற்றும் ஏனைய நாடுகளின் சந்தையைக் கையகப்படுத்த சீனா முயற்சிக்கின்றது. புதிய ஏகாதிபத்தியமாக வளர முற்படும் சீனாவை மையமாகக் கொண்டு 2012 இன் பின்னதாக அரசியல் உறவுகளில் பெரிய மாறுதல்களை எதிர்பார்க்கலாம் என அவதானிகள் எதிர்வு கூறுகின்றனர்.

Exit mobile version