தற்போது இலங்கைக்கு விஜயம் செய்துள்ள சீனப் பாதுகாப்பு அமைச்சர் ஜெனரல் லியான் குவான்கிலி, நாடு திரும்பும் வழியில் இந்தியாவிற்கும் விஜயம் செய்ய உள்ளார்.
அண்டை நாடுகளுடன் நட்புறவை பேணும் நோக்கில் இந்த விஜயங்கள் அமைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.
மூன்று நாள் விஜயமொன்றை மேற்கொண்டு சீனப் பாதுகாப்பு அமைச்சர் இந்தியாவிற்கு செல்ல உள்ளதாகக் குறிப்பிடப்படுகிறது.