Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சீக்கியப் படுகொலைகளின் பின்னணியில் பிரித்தானிய அரசு : புதிய தகவல்கள் வெளியாகின

sasஉலகின் அதிகாரவர்கங்கள் அழிப்பதற்காக தமக்கிடையே ஒத்துழைப்பு வழங்கிக் கொள்வது வழமையான ஒன்று. இலங்கையில் வன்னிப் படுகொலையில் மட்டுமல்ல இன்றுவரை ஏகபோக நாடுகள் தமது அடிமை நாடுகளுக்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. 1984 ஆம் ஆண்டு தமிழ்ப் பேசும் மக்கள் மீதான இனப்படுகொலை நிகழ்வுகளை ஒத்த சம்பவம் ஒன்று நடைபெற்றது. சீக்கியர்களுக்கு எதிராக வன்முறை இந்தியா முழுவதும் தலைவிரித்தாடியது. முள்ளிவாய்க்கால் சுற்றிவழைக்கபட்டது போன்று அம்ரிஸ்டாரில் இருந்த சீக்கியர்களின் பொற்கோவில் சுற்றிவழைக்கப்பட்டு தாக்குதல் ஆரம்பமானது.

பிரித்தானியா புலம்பெயர் சீக்கியர்கள் அதிகளவில் வாழ்ந்த நாடு. சவுத்தோல் போன்ற பல நகரங்கள் சீக்கியர்களது நகரங்களாகவே இருந்தன. தமிழர்களைப் போலன்றி பல்வேறு பிரதேசங்களில் சீக்கியர்கள் பெரும்பான்மையாக வாழ்ந்தார்கள். இந்தியப் பிரதமர் இந்திரா காந்தி சீக்கியர்களுக்கு எதிரன இனப்படுகொலையை நடத்திய போது இன்று போலவே பிரித்தானியா கண்டனம் தெரிவித்தது.

புலம் பெயர் சீக்கிய அமைப்புக்கள் பிரித்தானிய அரசுடன் பேச்சுவார்த்த நடத்தியது. பிரித்தானியா போர்க்குற்றம் குறித்தெல்லாம் வாய்கிழியப் பேசியது. சீக்கியர்களின் புலம்பெயர் தேசிய வாதிகள் ஏகாதிபத்திய நாடுகளை வளைத்துப்போட்டு இந்தியாவின் பிடியிலிருந்து சீக்கிய தேசத்தை விடுவிப்போம் என்றார்கள்.

நடந்தது வேறு. பொற்கோவிலில் நடத்தப்பட்ட கோரமான தாக்குதல்களில் பிரித்தானிய அரசின் பங்களிப்பும் இருந்தது என அண்மையில் வெளியான ஆவணங்கள் கூறுகின்றன.

இன்றைய கார்டியன் பத்திரிகையில் இதுகுறித்த தகவல்கள் வெளியாகின. புலம் பெயர் சீக்கியக் குழுக்கள் பொற்கோவில் படுகொலைகளில் பிரித்தானிய அரசின் பங்கு குறித்து விசாரணை நடத்த வேண்டும் என பிரித்தானிய அரசைக் கோரியுள்ளன. ஆவணங்களில் ஒரு பகுதியே வெளியிடப்பட்டுள்ளதால் புரொம்ளிப் பகுதியைச் சேர்ந்த தொழிற்கட்சி பாராளுமன்ற உறுப்பினர் மேலதிக ஆவணங்களை வெளிநாட்டமைச்சு வெளியிடவேண்டும் எனக் கோரியுள்ளார். புரொம்ளி பகுதியில் பெருமளவிலான சீக்கியர்கள் வாழ்கின்றனர்.

30 வருடங்களுக்கு ஒருமுறை சில ஆவணங்களை வெளியிடுவது என்ற பிரித்தானியச் சட்டப்படி 2014 புதுவருடத் தினத்தன்று இந்த ஆவணங்கள் வெளியாகின.

பொற்கோவிலிருந்து சீக்கியப் போராளிகளை வெளியேற்றுவதற்கு பிரித்தானிய அரசின் பங்களிப்பை இந்திய அரசு கோரியிருந்தது. அதற்கு வெளிநாட்டமைச்சின் சார்பில் பதிலளித்த பிரையன் போல் என்பவர், பிரித்தானியப் பிரதமரின் அனுமதியுடன் இந்தியாவின் கோரிக்கையை வெளிநாட்டுச் செயலாளர் ஏற்றுக்கொள்வதாக தெரிவித்தார்.

பிரித்தானிய விசேட விமானத்துறை அதிகாரி இந்தியாவிற்குப் பயணம் மேற்கொண்டு பொற்கோவிலைத் தாக்குவதற்கான திட்டத்தை வரைகிறார். அதனை இந்திராகாந்தி ஏற்றுக்கொண்டு உடனடியாகவே தாக்குதல் நடத்தப்படுகிறது.

23 ம் திகதி பெப்ருவரி மாதம் போல் எழுதிய கடிதத்தில் ‘பொற்கோவிலை தாக்குவதற்கான பிரித்தானியத் தலையீடு பிரித்தானியாவில் வாழும் சீக்கியர்கள் மத்தியில் கொந்தளிப்பை ஏற்படுத்தக்கூடும்’ என்று குறிப்பிடுகிறார்.

இத்தகவல் வெளியே தெரியாமல் மட்டுப்படுத்துமாறும் பிரையன் போல் எழுதிகிறார். உள்நாட்டில் சிக்கல்களை ஏற்படுத்தும் என்கிறார். பிரித்தானியா வகுத்துக்கொடுத்த திட்டம் இந்தியாவால் பாரட்டப்பட்டது மட்டுமன்றி இந்தியாவிலும் லண்டனிலும் திட்டம் செவ்வனே பின்பற்றப்பட்டது என்கிறார்.

பிரித்தானியாவில் சீக் கவுன்சில் வெளியிட்டுள்ள அறிக்கையில் ‘ஆயிரக்கணக்கான பெண்களும் குழந்தைகளும் கொல்லப்பட்டனர். சீக்கியர்களின் நாள்காட்டியில் புனித நாளான்று தாக்குதல் நடத்தப்பட்டது. உயிரிழப்புக்களைத் தவிர, கட்டடங்களும், சொத்துக்களும் அழிக்கப்பட்டன. வரலாற்றுரீதியான சீக்கியர்களின் நூலகம் சூறையாடப்பட்டது. வரலாற்றில் கறைபடிந்த நாள்’ என்று குறிப்பிட்டுள்ளது.

இன்னும் மூன்று கடிதங்கள் உட்பட இதே ஆண்டு மார்ச் மாதத்தின் பின்னான எந்த ஆவணங்களும் வெளியிட்ப்படவில்லை என வலைப்பதிவு கூறுகின்றது.

Exit mobile version