Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சி.பி.எம் செயலர் மீது கொலைவெறித் தாக்குதல். தமிழகம் முழுக்க திமுக, காங் ரௌடிகள் அட்டகாசம்.

கடலூர் மாவட்டம் சிதம்பரம் அண்ணாமலை நகர் சிபிஎம் செயலாளராக இருப்பவர் ராஜா. ஞாயி றன்று மதியம் 1 மணி அள வில் சிதம்பரம் மேலவீதி யில் உள்ள சி.பிஎம் மாநில குழு உறுப்பினர் மூசாவின் கடைக்கு வந்து அங்கு இருந் தவர்களிடம் திங்கட்கிழமை மறியல் சம்பந்தமாக பேசி கொண்டு இருந்தார்.அப்போது திமுக, மற் றும் காங்கிரஸ் கட்சியை சேர்ந்தவர்கள் மேலவீதியில் உள்ள அனைத்து கடைகளை யும் திங்கட்கிழமை திறக்க வேண்டும் என்று மிரட்டல் தொனியில் சொல்லி வந்த னர். மூசா கடையின் அருகே வந்தபோது மூப்பனார் பேரவையை சேர்ந்த மக் கின், ராதா, முகமது ஜியாவு தீன், மூவரும் செயலாளர் ராஜாவையும் மூசாவையும் தகாத வார்த்தையால் பேசி னார்கள், கடையின் வெளியே வந்த சிபிஎம் செயலாளர் ராஜா, ஏன் திட்டுகின்றீர்கள் என்று கேட்டார் அப் போது, மக்கின் (காங்.) ராதா, (காங்.) வெங்கடேசன் (திமுக), முகமது ஜியாவுதீன் (காங்கி ரஸ்) ஆகியோர் ராஜாவை சட்டையை பிடித்து கிழித்து, ரோட்டில் இழுத்துப் போட்டு கடுமையாக தாக்கினார்கள். ராஜா அடிதாங்க முடியா மல் மூசாவின் கடைக்குள் போய் உட்கார்ந்து கொண்டார்.அப்போது அமைச்சர் பன்னீர் செல்வத்தின் அக்கா மகனும் சிதம்பரம் நகர திமுக செயலாளருமான செந் தில் குமார், மூசா கடையின் உள்ளே சென்று அங்கு உட் கார்ந்து இருந்த நகரச் செய லாளர் ராஜாவை காலால் உதைத்து,அடித்தும், அவ ரது சட்டையை கிழித்தும் தாக்கினார்.இந்த சம்பவத்தை கேள் விப்பட்ட சிபிஎம் மாநில குழு உறுப்பினர் மூசா, சிதம் பரம் நகர செயலாளர் ராமச் சந்திரன், மாவட்ட குழு உறுப் பினர் நடராஜன், அதிமுக நகரச்செயலாளர் தோப்பு. சுந்தர், அதிமுக முன்னாள் நகர்மன்ற தலைவர் குமார், மதிமுக நகரச்செயலாளர் சீனுவாசன் உட்பட கூட் டணி கட்சியை சேர்ந்த 200க்கும் மேற்பட்டவர்கள் மேலவீதியில் ஒன்று கூடி சிதம்பரம் காவல் நிலையம் வரை சிபிஎம் நகர செயலா ளர் ராஜாவை தாக்கிய கொலை வெறியர்கள் செந் தில்குமார், ராதா, மக்கின், முகமது ஜியாவுதீன், வெங்க டேசன் ஆகியோரை உடனே கைது செய் என்று கோஷ மிட்ட படி காவல் நிலையத் திற்கு வந்தனர்.அப்போது காவலர்கள் இவர்களை உள்ளே அனு மதிக்க மறுத்துவிட்டனர். இதனால் போலீஸ் நிலை யம் முன்பு உட்கார்ந்து முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டனர். கடுமையான வாக்கு வாதத்திற்கு பிறகு காவல்துறையினர் அவர் களை உள்ளேஅனுமதித்து தாக்குதலுக்கு உட்பட்ட ராஜாவிடம் புகார் மனுவை வாங்கி கொண்டு சம்பந்த பட்டவர்களின் மீது .. பிரிவு147, 452, 323, 501/1 படி வழக்குப் பதிவு செய்துள்ளனர்.

தாக்குதலுக்கு உட்பட்ட ராஜா சிதம்பரம் அரசு மருத் துவமனையில் அனுமதிக்கப் பட்டு சிகிச்சை பெற்று வரு கிறார். இவரை கூட்டணி கட்சி தலைவர்கள் சந்தித்து ஆறுதல் கூறினர்.மறியலுக்கு ஆட்டோ வில் ஒலி பெருக்கி மூலம் விளம்பரம் செய்ய சிபிஎம், அதிமுக தரப்பினருக்கு அனு மதி மறுக்கப்பட்டுள்ளது. ஆனால் திமுக தரப்பின ருக்கு அனுமதி வழங்கியுள் ளனர். இதனை கண்டித்தும் புகார் கொடுக்கப்பட்டு உள்ளது.இந்நிலையில் திமுக காங்கிரஸ் கட்சியை சேர்ந் தவர்கள், எங்களை அரிவா ளால் வெட்ட வந்தார்கள் என்று ஒரு பொய்யான புகாரை கொடுத்துள்ளனர்.பெட்ரோல், சமையல் கேஸ், டீசல், மண்ணெண்ணெய் விலை உயர்வை கண்டித்து திங்கள்கிழமை இடதுசாரி கட்சிகள் பொதுவேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன.அதிமுக, மார்க்சிஸ்ட், சிபிஐ, பார்வர்டு பிளாக், மூவேந்தர் முன்னணி கழகம், மதச்சார்பற்ற ஜனதா தளம் உள்ளிட்ட பல்வேறு கட்சிகள் இப்போராட்டத்தில் பங்கெடுப்பதால் இயல்பு வாழ்க்கை பாதிக்கும் என்பதால் திமுக தலைவரும், முதல்வருமான கருணாநிதி, வன்முறையில் ஈடுபட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியுள்ளார். ஆனால், பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் உள்ள வணிகர்கள் கடையடைப்பு நடத்த முடிவு செய்துள்ளனர். அத்தியாவசியப்பொருட்கள் விலை உயர்வால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ள பொதுமக்கள் மற்றும் வணிகர்கள் தற்போது பெட்ரோலியப்பொருட்கள் விலை உயர்வால் மேலும் பாதிக்கப்பட்டுள்ளதால் இடதுசாரிகள் தேசிய அளவில் அறைகூவல் விடுத்துள்ள போராட்டத்திற்கு பேராதரவு தெரிவித்துள்ள நிலையில், ஞாயிறன்று தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் திமுகவினர் கைகளில் உருட்டுக்கட்டைகளுடன் வந்து, யாராவது நாளை கடை அடைத்தால் தொழில் நடத்த முடியாது என மிரட்டினர், பல இடங்களில் காவல்துறையினரின் முன்னிலையில் ஆளுங்கட்சியினரின் இந்த மிரட்டல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது. சிதம்பரம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் பொதுவேலைநிறுத்தத்திற்கு ஆதரவளிப்போம் என்ற கடைக்காரர்கள் மீது தாக்குதல் நடத்தியுள்ளனர். வன்முறையில் ஈடுபட்டால் நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் கருணாநிதி கூறியிருப்பது அவரது கட்சி ரௌடிகளுக்கு பொறுந்தாது போலும்.

Exit mobile version