Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிவசேகரத்தின் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு

சி.சிவசேகரத்தின் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு நாளை ஓரே சமயத்தில் 15 இடங்களில் வெளியிடப்படவிருக்கிறது.
கொழும்பில் தேசிய கலை இலக்கியப் பேரவையின் கைலாசபதி கேட்போர் கூடத்தில் சட்டத்தரணி சோ.தேவராசா தலைமையில் “முட்கம்பித்தீவு” கவிதைத் தொகுதி வெளியீடு நடைபெற உள்ள அதே சமயம் வடக்கு மற்றும் மலையகப் பகுதிகள் என 15 இடங்களில் இக்கவிதைத் தொகுதி வெளியீடு இடம் பெறவுமிருக்கிறது.
புத்தகப் பண்பாட்டு வரலாற்றில் பல காத்திரமான முயற்சிகளை மேற்கொண்டு வந்துள்ள தேசிய கலை இலக்கியப் பேரவையினர் ஒரே சமயத்தில் 15 இடங்களில் புத்தக வெளியீட்டினை நடாத்த ஏற்பாடுகள் மேற்கொண்டிருக்கிறமை கவனத்தில் கொள்ள வேண்டியதொரு விடயமாகும்.
அண்மைக்காலங்களில் பல நூல் வெளியீடுகளையும், புத்கக் கண்காட்சிகளையும் நாட்டின் பல பகுதிகளிலும் நடாத்தி வருகின்றமையும் குறிப்பிட்டுக் கூற வேண்டியதொரு விடயமாகும்.

Exit mobile version