இலங்கையில் ஒடுக்கப்படும் மக்களுக்காகக் குரல்கொடுப்பவர்களையும் பாசிச அரசின் ஆணையை நிராகரிப்பவர்களையும் மன் நோயாளர்கள் என்று மருத்துவ மனைக்கும் புனர்வாழ்வும் முக்கம்களுக்கும் அனுப்பி வருகிறது ராஜபக்ச அரசு. ராஜபக்ச அரசிற்கு ஆதரவாக அதன் அடிவருடிகள் புலம்பெயர் நாடுகளில் நேரடியாகவும் மறைமுகமாகவும் அரசியல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள். இந்த நிலையில் மக்கள் சேவையை மேற்கொண்டு வரும் நேர்மையான மருத்துவ அதிகாரி சிவசங்கர் மனநோயாளி என்று போலிக் குற்றம் சுமத்தப்பட்டு கைது செய்யப்பட்டுள்ளார்.
இவர் மீது குற்றம் சுமத்த இனப்படுகொலை அரசிற்கு துணைபோனவர் சிவதாசன் என்ற சக மருத்துவர்.
யாழ்.பல்கலைக்க்கழகத்தில் சிவசங்கரோடு கல்விகற்ற பலர் பிரித்தானியா கனடா போன்ற நாடுகளில் வாழ்கிறார்கள். இவர்கள் மக்களின் வரிப்பணத்தில் இலவசக் கல்வியைப் பெற்றவர்கள்.
வசதிபடைத்த வாழ்க்கை வாழ்கின்ற நூற்றுக்கணக்கான வைத்தியர்கள் சிவசங்கரின் கைதைக் கண்டுகொண்டதாகத் தெரியவில்லை.
காட்டிக்கொடுக்கப்பட்ட மருத்துவர் சிவசங்கர் : பணநோய் மருத்துவர் சிவதாசனின் வாக்குமூலம்