வடபோர்முனையில் தமிழீழ விடுதலைப் புலிகளுடனான போரில் சில நாட்களிலேயே சிறிலங்கா படையைச் சேர்ந்த 500 பேர் கொல்லப்பட்டுவிட்டனர் என்று அந்நாட்டின் பிரதான எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவருமான ரணில் விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார். |
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர்கள் மாநாட்டில் அவர் பேசியதாவது:
சிறிலங்கா படைத்தரப்பில் கடந்த சில நாட்களில் 500 பேர் கொல்லப்பட்டுள்ளனர். அதே எண்ணிக்கையில் படுகாயங்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர். ஆனால் அவர்களுக்கான உரிய சிகிச்சைகளை மகிந்த அரசு வழங்கவில்லை. இதனால் உயிரிழப்புகள் மேலும் அதிகரிக்கின்றன. எமது ஆட்சிக்காலத்தில் 12 வானூர்திகள் இருந்தன. ஆனால் இவற்றில் 2 வானூர்திகளே இப்போது இயக்கப்படுகின்றன. மாரி கால சமரில் கடல் வழியாக வழங்கல் என்பது சிக்கலானது. ஆகையால் படையினருக்கு வான்வழி வழங்கலே தேவை. ஆனால் வானூர்திகள் அப்படியான நடவடிக்கைகளில் இறக்கப்படவில்லை என்றார் அவர். |