ஐரோப்பாவில் பல்தேசிய நிறுவனங்கள் சில்லறை வணிகத்தை ஆக்கிரமித்து, அழித்து மீள முடியாத பொருளாதார நெருக்கடிகளை ஏற்படுத்தியுள்ளன. இதுவரை ஐரோப்பா சந்தித்திராத வறுமைச் சமூகம் ஒன்றை பல்தேசியக் கம்பனிகள் தோற்றுவித்துள்ளன. அதே பல் தேசிய நிறுவனங்கள் இப்போது இந்தியாவின் சில்லறை வணிகத்தை ஆக்கிரமிக்க இந்திய அரசு அனுமதி வழங்கியுள்ளது. ஏற்கனவே வறிய நாடுகளில் ஒன்றாக வகைப்படுத்தப்பட்டுள்ள இந்தியாவின் எஞ்சியிருக்கும் மூலதனத்தையும் ஒட்டச் சுரண்டுவதற்கு, சட்டரீதியாகக் கொள்ளையடிப்பதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
அமரிக்க ஜனாதிபதி ஒபாமா கொள்ளையடிப்பதற்கு அனுமதி வழங்குமாறு இந்திய அரசை மிரட்ட இந்திய அரசு தன்னை அமரிக்காவின் அடிமை எனப் பிரகடனம் செய்துகொண்டது. மக்களின் எதிர்ப்பை எதிர்கொள்ள முடியாமல் இந்தியக் கூட்டரசாங்கத்திலிருந்து கட்சிகள் விலகிக்கொள்கின்றன. இந்த நிலையில் தமிழ் நாட்டின் இந்திய மத்திய அரசின் கூட்டாளியான திராவிட முன்னேற்றக் கழகம் மத்திய அரசிலிருந்து விலகிக்கொள்ளாது என அக்கட்சியின் ஆயுட்காலத் தலைவர் முத்துவேல் கருணாநிதி தெரிவித்துள்ளார்.