சில்லரை வர்த்தகத்தில் அன்னிய முதலீடு என்பது அவசர கோலத்தில் எடுக்கப்பட்ட முடிவுகள் அல்ல. சிந்தித்துதான் எடுத்துள்ளோம். அன்னிய முதலீட்டில் சில நிபந்தனைகள வைத்துள்ளோம். இது சிறு மற்றும் நடுத்தர வியாபாரிகளை ஊக்கப்படுத்தும். விசவாயிகள் நல்ல விலை பெறுவர் என்று இந்தியப் பிரதமர் மன்மோகன் சிங் குறிப்பிட்டுள்ளார்.
மேற்குநாடுகளில் தமது பகற்கொள்ளையால் பெரும் அழிவை ஏற்படுத்திய பல்தேசிய நிறுவனங்கள் இப்போது வறிய நாடுகளைக் குறிவைக்கின்றன.
தொழில் வளர்ச்சியடைந்திருந்த நாடுகளின் சீரழிவை வேகப்படுத்திய அதே பல் தேசிய நிறுவனங்கள் இந்தியா போன்ற நாடுகளைச் சூறையாடி வருகின்றன. நிறுவன மயமான சில்லரை வர்த்தகத்தை 60 களில் மேற்கு நாடுகளில் அறிமுகப்படுத்திய பின்னர் 80 ஆம் ஆண்டுக்கு இடையில் சிறிய மற்றும் நடுத்தர விவசாயம் முற்றாக அழிக்கப்பட்டுவிட்டது.