Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறையில் போராடும் ஆசாத் சாலி : புலம்பெயர் அமைப்புக்கள் மௌனம்

asad_sallyமுஸ்லிம்களுக்கு எதிரான நாஸி அமைப்பான பொதுபல சேனாவை உருவாக்கி அன்னிய சக்திகளின் உதவியுடன் அரச பயங்கரவாதத்தை மக்கள் மீது கட்டவிழ்த்துவிட்டுள்ள மகிந்த பாசிச அரசு அசாத் சாலியைக் கைது செய்து சிறையில் அடைத்துள்ளது. மக்களின் அடிப்படை உரிமைக்காக பாசிஸ்டுக்களின் கோர ஒடுக்குமுறைகளுக்கு மத்தியில் குரலெழுப்பிய ஆசாத் சாலி சிறையில் உண்ணாவிரதத்தைத் தொடர்கிறார். உடல் நிலை மிகவும் பாதிப்படைந்த நிலையில் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகத் தெரியவருகிறது. இன்றைய எரியும் இலங்கையில் மக்களின் கதாநாயகனாகக் கருதப்படும் அசாத் சாலியின் கைதிற்கு எதிராக இலங்கை அரசிற்கு எதிராகப் போராடுவதாகக் கூறும் புலிசார் புலம் பெயர் அமைப்புக்கள் குறைந்தபட்ச அறிக்கைகூட வெளியிடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

தவிர யாழ்ப்பாண முஸ்லிம்களுக்கு ஆதரவாகக் குரல்கொடுப்பதாக கையெழுத்து வேட்டை நடத்திய இலங்கை அரச சார்பு புத்திசீவிக் கும்பல்கள் ஆசாத் சாலியில் கைது குறித்து கண்ணைமூடிக்கொண்டுள்ளன.

Exit mobile version