Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறையிலிருந்து கனிமொழி பின் வாசல் வழியாக வெளியேறிவிட்டார்

திகார் சிறையிலிருந்து கனிமொழி பின் வாசல் வழியாக வெளியேறிவிட்டதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இன்று மாலை 7 மணி அளவில் கனிமொழி சிறையில் இருந்து வெளியே வருவார் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், கனிமொழியை வரவேற்பதற்காக திமுக தலைவர்கள் மற்றும் எம்.பி.க்கள் பலர் திகார் சிறை முன்னர் திரண்டு நின்றனர்.
அதேப்போன்று தொலைக்காட்சி மற்றும் பத்திரிகை நிருபர்கள்,கேமராமேன்களும் ஏராளமான அளவில் சிறை வாயிலில் குவிந்திருந்த நிலையில், சிறை அதிகாரிகளின் அறிவுரையின் பேரில் கனிமொழி பிரதான வாயில் வழியாக அல்லாமல் இரண்டாம் எண் வாயில் வழியாக வெளியேறிவிட்டதாக தெரிவிக்கப்பட்டது.
இதனால் பத்திரிகையாளர்களும், திமுகவினரும் ஏமாற்றத்துடன் திரும்பிச் சென்றனர்.

Exit mobile version