Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறுவர்களைப் பாலியல் வன்புணர்ச்சிக்கு உட்படுத்தி களியாட்டம் நடத்திய பிரித்தானிய ஆளும் கட்சி

pedeoஐரோப்பாவும் அமெரிக்காவும் உலக முதலாளித்துவத்தின் மையப்புள்ளி. அதன் அழுக்குகளையெல்லாம் ஒன்று சேர்த்து அழுகிப்போன அதிகாரவர்கத்தின் கரங்களில் மக்களை ஒப்படைத்துளது. இனிமேலும் நிலைகொள்ள முடியாது சேடமிழுக்கும் முதலாளித்துவ அமைப்பு மக்கள் யார் மக்கள் அல்லாதவர்கள் யார் என்பதில் மிகவும் தெளிவான நிலைப்பட்டிலிருக்கிறது. வாழ்வதற்காக நாளாந்தம் உழைக்கும் பெரும்பான்மை மக்களை நிதி மூலதனத்தின் பாதாளச் சிறைக்குள் அடைத்து வைத்துவிட்டு அவர்களின் குழந்தைகளைக் கூட அபகரித்து அனுபவித்துக்கொள்கிறது.

பருந்துகளிடம் அகப்பட்டுக்கொண்ட கோழிக்குஞ்சுகளைப் போல குழந்தைகள் தவித்த சம்பவங்கள் இப்போது வெளிவர ஆரம்பித்துள்ளன.

இங்கிலாந்தில் 1980 ஆம் ஆண்டில் நடைபெற்ற இன்றைய ஆளும் ரோரிக் கட்சியின் மாநாட்டின் பின்னர் நடைபெற்ற களியாட்ட விருந்துபசாரத்தில் குழந்தைச் சிறுவர்களை அழைத்து பாராளுமன்ற உறுப்பினர்கள் பாலியல் வன்முறையில் ஈடுபட்டுள்ளார்கள். சண்டே மெயில் வார இதழுக்கு முன்னை நாள் ரோரிப் பிரதானிகளில் ஒருவரான அன்ரனி கில்பேர்ட்ஹோர்ப் வழங்கிய நேர்காணலில் தான் இவற்றைக் கண்ணால் கண்ட சாட்சி என்கிறார்.

1983 ஆம் ஆண்டு நடைபெற்ற கட்சியின் மற்றொரு விருந்துபசாரத்தில் குழந்தைச் சிறுவர்கள் வாடகைக்கு அமர்த்தப்பட்டு பாலியல் வன்புணர்விற்கு உட்படுத்தப்பட்டார்கள் என்கிறார். அதற்கும் மேலாக, இந்த நடைமுறை பல ஆண்டுகளாகத் தொடர்கிறது என்கிறார். சேர் பீட்டர் மொரிசன் என்பவர் பிரித்தானிய மகாராணியால் கௌரவிக்கப்பட்டவர். மாக்ரட் தட்சர் பிரதமராகவிருந்த காலத்தில் அவரின் மிக நெருக்கமான நண்பர். கட்சியின் உதவித் தலைவர் பதவி பீட்டர் மொரிசனுக்கும் மாக்ரட் தட்சரின் பரிந்துரையின் பெயரிலேயே வழங்கப்பட்டது.

மார்கிரட் தட்சரின் தனிப்பட்ட மெய்ப்பாதுகாலவலர் பரி ஸ்ரீவென்ஸ். மார்கிரட் தட்சருக்கு பீர்டர் மோரிசனின் பாலியல் விருந்துபசாரங்கள் தொடர்பாக தான் எச்சரித்திருந்ததாகவும் அதனை அவர் கண்டுகொள்ளவில்லை என்றும் தெரிவித்தார்.

1980 ஆம் ஆண்டில் வெஸ்ட் மினிஸ்டர் பகுதியிலுள்ள ஆடம்பர விடுதிக்குத் தாம் அழைத்துச் செல்லப்பட்டு முக்கிய அரசியல்வாதிகளுகு இரையாக்கப்பட்டோம் என ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

51 வது வயதில் மாரடைப்பால் மாண்டு போன மொரிசனின் வீட்டிற்கு தான் அழைத்துச் செல்லப்பட்டதாக அப்போது சிறுவனாகவிருந்த ஒருவர் வாக்குமூலம் வழங்கியுள்ளார். கொன்சர்வேட்டீவ் கட்சியின் தலைவாராக நியமிக்கப்படவிருந்த பீட்டர் மொரிசன் செத்துப்போகமல் இருந்திருந்தால் தமிழர்கள் அரோகரா முழக்கமிட யாழ்ப்பாணத் தெருக்களில் தமிழ்க் குழந்தைகளின் கைகளைப் பிடித்துக் கண்ணீர்விட்டிருகவும் வாய்ப்பிருந்திருக்கும்.

Exit mobile version