Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறுமிகள் மீதான பாலியல் கொடுமையும் கொலையும்:பான் கீ மூன் இன் சுடலை ஞானம்

bankiஇந்தியாவின் உத்தர பிரதேச மாநிலத்தின் படான் மாவட்டத்தில் சிறுமிகள் இருவர் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, தூக்கிடப்பட்டு கொலை செய்யப்பட்ட சம்பவம் தன்னை அதிர்ச்சியடைய செய்ததாகவும், இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டுமெனவும் ஐ.நா பொதுச் செயலாளர் பான் கி மூன் தெரிவித்துள்ளார்.

பாலியல் வன்கொடுமைக்கு எதிரான பிரச்சாரம் மேற்கொள்ளும் நிகழ்ச்சியில் கலந்துக்கொண்ட பான் கி மூன், பெண்களுக்கு எதிரான வன்முறை ஏற்றுக்கொள்ளமுடியாதது. ஆனால், உலகம் முழுவதும் அதுதான் நடந்துக்கொண்டிருக்கிறது.

கடந்த இரண்டு வாரங்களில் மட்டும் நைஜீரியா, பாகிஸ்தான், கலிபோர்னியா மற்றும் இந்தியாவில் பெண்கள் மற்றும் பெண் குழந்தைகளுக்கு எதிராக கொடூரமான, இழிவான சம்பவங்கள் நடைபெற்றுள்ளது.
இதில் குறிப்பாக இந்தியாவில் உத்தர பிரதேச மாநிலத்தில் சிறுமிகள் பாலியல் வன்கொடுமைக்கு உட்படுத்தப்பட்டு, கொலை செய்யப்பட்ட சம்பவம் என்னை அதிர்ச்சியடைய செய்தது. இது தொடர்பாக உடனடியாக நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டும். பெண்களுக்கெதிரான வன்முறைகள், நம்முடைய சமூகத்திற்கு எதிரான ஒன்று என்பதை நாம் உணரவேண்டும். ‘ஆண்கள் ஆண்களாகத்தான் இருப்பார்கள்’ என்னும் கருத்துக்களை மக்கள் புறக்கணிக்க வேண்டும் என கூறியுள்ளார்.

இச் சிறுமிகளின் கொலைக்கு அதிகாரவர்க்கத்தினதும் ஆதிக்க சாதிக் வெறியர்களதும் சமூகத்தின் மீதான ஆதிக்கமே பிரதான காரணம். ஆண்கள் ஆண்களாகத் தான் இருப்பார்கள் என்பதைப் போல அதிகாரவர்க்கம் அதிகாரவர்க்காமாகவும் ஆதிக்கசாதி ஆதிக்கசாதியாகவும் தான் இருக்கும் என்பதை பன் கீ மூன் எப்போதும் போல மறந்துவிடுகிறார்.

வினவு இணையத்தில் வெளியான கட்டுரை:

கடந்த செவ்வாய்க்கிழமை 27.05.2014 இரவு, உத்திர பிரதேச மாநிலம் பதூன் மாவட்டம் உஷைத் பகுதியை சேர்ந்த கத்ரா கிராமத்தில் தாழ்த்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த இரு பதின்ம வயது சிறுமிகள் இரு காவலர்கள் உள்ளிட்ட ஏழு ஆதிக்க சாதி வெறியர்களால் கும்பலாக பாலியல் வல்லுறவுக்குள்ளாக்கப்பட்டு, பிறகு கிராமத்தில் பொது இடத்தில் உள்ள மாமரத்தில் தூக்கிலேற்றப்பட்டு கொல்லப்பட்டுள்ளனர்.

மேலும் …

ஆதிக்க சாதிவெறியால் கொல்லப்பட்ட உபி தலித் சகோதரிகள் !

Exit mobile version