தாம் இராணுவத்துடன் இணைந்து செயற்படுவதாகவும் பல்கலைக்கழக மாணவர்கள் கைக்குண்டுத் தாக்குதல் நடத்தியமை உண்மையே என்றும் இக் குழுவின் முக்கிய உறுப்பினரும் பிரித்தானியப் பிரசா உரிமை பெற்றவருமான கீரன் பிரித்தானிய தமிழ்த் தொலைக் காட்சியொன்றில் தெரிவித்திருந்தார்.
இத்தாக்குதலில் அலுவலகம் சேதமாகியுள்ளதாகவும் இது குறித்து, கோப்பாய் பொலிஸ் நிலையத்தில் இக்குழுவின் யாழ். மாவட்ட அமைப்பாளர் செந்தூரனால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது. புதிய முறைப்பாடு முன்னரைப் போல சந்தேகத்திற்கு உரியவர்களைக் கைது செய்வதற்கான முன்னேற்பாடா என்று சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இதே வேளை யாழ்ப்பாணத்தில் நடைபெறும் 41 வது இலக்கியச் சந்திப்பு என்ற நிகழ்வில் சிறீ ரெலோவின் முக்கிய உறுப்பினர்கள் பிரதான ஏற்பாட்டாளர்கள் எனவும் தெரியவருகிறது. இலங்கை அரச ஆதரவு புலம்பெயர் தமிழர்கள் இணைந்து நடத்தும் இந்த நிகழ்வில் இலங்கையிலுள்ள பல அரச துணைக்குழு உறுப்பினர்கள் இணைந்து கொண்டுள்ளனர்.
சிறீ ரெலோ முக்கிய உறுப்பினர் ஒருவர் பாரிஸ் நகரில் பருதி என்ற விடுதலைப் புலி உறுப்பினர் ஒருவரைக் கொலைசெய்தது தொடர்பாகக் கைதானது தெரிந்ததே.