நீதிபதி சிறீஸ்கந்தராஜவின் திடீர் மரணம் சட்டத்துறை வட்டாரத்தில் பலத்த சந்தேகங்களை ஏற்படுத்தியுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் கலாநிதி ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜாவே தீர்ப்பு வழங்கியிருந்தார்.
அந்த தீர்ப்பின் முக்கிய பங்கு அவருக்கே இருந்தது . அத்துடன் அந்த தீர்ப்பு இன்னும் செல்லுப்படியாகவே இருக்கின்றது.
ராஜபக்ஷ அரசாங்கம் எவ்வாறான வாதப் பிரதிவாதங்களை முன்வைத்த போதும் முன்னாள் பிரதம நீதியரசருக்கு எதிரான நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானதே. இதனை மாற்றியமைக்க ராஜபக்ஷவினருக்கு இதுவரை முடியாமல் போயுள்ளது.
முன்னாள் பிரதம நீதியரசர் ஷிராணி பண்டாரநாயக்கவுக்கு எதிராக அரசாங்கம் கொண்டு வந்த நம்பிக்கையில்லா தீர்மானம் சட்டவிரோதமானது என மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதியரசர் ஸ்ரீ ஸ்கந்தராஜா வழங்கிய தீர்ப்பு காரணமாக அரசாங்கம் அவர் மீது கோபத்தை கொண்டிருந்ததாக கூறப்படுகிறது.
இதன் காரணமாக அரசாங்கம் உயர்நீதிமன்ற நீதியரசராக பதவி உயர்வையும் வழங்கவில்லை. இவருக்கு பதிலாக சட்டமா அதிபர் திணைக்களத்தின் மேலதிக சொலிசிட்டர் ஜெனரலாக இருந்த புவனேக அலுவிகார என்பவரை அரசாங்கம், உயர்நீதிமன்ற நீதியரசராக நியமித்தது.
இந்த நிலையிலேயே நீதியரசர் ஸ்ரீஸ்கந்தராஜா திடீர் சுகவீனமடைந்தார். இவருக்கு பாரதூரமான நோய்கள் எதுவும் இருக்கவில்லை . 60 வயதான ஸ்ரீ ஸ்கந்தராஜா திடீரென சுகவீனமுற்றதுடன் அவரது மூளைசெயலிழந்தது.
ஆக ராஜபக்ச கும்பலின் வேலையாக இது இருக்கலாம் எனச் சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன,