Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறீலங்கா மிரர் ஊடகம் முடக்கப்பட்டது : 9 ஊடகவியலாளர்கள் கைது

மகிந்த குடும்ப பாசிச அரசின் புலனாய்வுப் பிரிவினர் சிறீ லங்கா மிரார் இணையத்தளத்தை முற்றாக முடக்கியுள்ளனர்.அலுவலகத்திலுள்ள கணனிகள் அனைத்தையும் குற்றப் புலனாய்வுப் பிரிவினர் கைப்பற்றியுள்ளனர். 25 பேர் கொண்ட புலனாய்வுக் மகிந்த அரசின் புலனாய்வுக் காடையர்கள் சிறீலங்கா மிரர் அலுவலகத்தினுள் நுளைந்து, அங்கு பணியாற்றிய ஒன்பது ஊடகவியலாளர்களையும் கைதுசெய்து சென்றுள்ளனர். பொய்யான தகவல்களை வெளியிடுவதாகக் குற்றம் சுமத்டப்பட்ட சிறீலங்கா மிரர் இணையம் தமிழ் சிங்கள மற்றும் ஆங்கில மொழிகளில் வெளியாகியிருந்தது.

ஐக்கிய தேசியக் கட்சிக்குச் சார்பான அரசியல் நிலைப்பாட்டில் இயங்கிய இந்த நிறுவனம் நீதிமன்ற உத்ட்தரவின் பின்னதாகவே மூடப்பட்டதாக கோதாபயவின் உத்தரவில் இயங்கும் பாதுகாப்பு அமைச்சு அறிக்கை வெளியிட்டுள்ளது.

மகிந்த சர்வாதிகார அரசின் கீழ் இதுவரை 17 ஊடகவியலாளார்கள் கொலைசெய்யப்பட்டுள்ளனர். பல இணையத் தளங்கள் முடக்கப்பட்டுள்ளன.

ஶ்ரீலங்கா மிரர் இணையத்தள அலுவலகத்தின் மேல் மாடியில் ஶ்ரீலங்கா எக்ஸ் நியூஸ் இணையளத்தளம் இயங்கிவந்தது.

அத்துடன், ஶ்ரீலங்கா மிரர் இணையத்தளம் இலங்கையின் தகவல் திணைக்களத்தில் பதிவு செய்யப்பட்ட இணையத்தளம் என அதன் நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர்.

Exit mobile version