Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறீலங்கா அரசுக்கு எதிராக சுவிஸில் கவனயீர்பு போராட்டம் – துளிகள்

இலங்கை அரசிற்கு எதிராகவும் சுவிஸ் நாட்டு சுற்றுலாத் துறையுடன் அதன் செயற்பாடுகளுக்கு எதிராகவும் துளிகள் என்ற அமைப்பு கவன ஈர்ப்புப் போராட்டம் ஒன்றை சுவிஸ் நாட்டில் ஒழுங்கு செய்துள்ளது. இது குறித்து அவர்கள் வெளியிட்டுள்ள அறிக்கை:
சிறீலங்கா அரசுக்கு எதிராக சுவிஸில் கவனயீர்பு போராட்டம் – துளிகள்
அன்புக்குரிய தமிழீழ மக்களே!!!
சுவிஸின் சுற்றுலாத் துறையான Travelhouse (SBB) எனும் நிறுவனம்Sri Lanka Air Lines உடன் இனைந்து உல்லாசத் துறையை மேன்படுத்தும் முகமாக விளம்பர நடைவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
சிறீ லங்க அரச பயங்கரவாத நாடானது தனது தமிழின அழிப்பை தொடர்ந்தும் முன்னெடுத்து வரும் நிலையில், ஐக்கிய நாடுகள் சபையின் போர்க்குற்ற விசாரணையை நிராகரித்து வரும் நிலையில், அனைத்துலகத் தொண்டு நிறுவனங்களையும் ஊடகங்களையும் தமிழீழ பிரதேசங்களுக்குள் அனுமதிக்காத நிலையில் , இராணுவ அடக்குமுறை வேலிக்குள் தமிழ் மக்கள் அடக்கி ஆளப்படும் நிலையில், கடத்தல்கள், கப்பம்பெறுதல், காணாமல் போகுதல், பாலியல் வன்முறைகள் தொடர்ந்துவரும் நிலையில், சித்திரவதைமுகாம்கள் அகற்றப்படாத நிலையில, திட்டமிட்ட நில ஆக்கிரமிப்புக்கள், சிங்களக் குடியேற்றங்கள், தமிழ் பிரதேசங்களுக்கு சிங்களப் பெயர் சூட்டல், சமூக கலாச்சாரச் சீர்கேடுகள, தமிழர்களின் பாரம்பரிய அடையாளங்களை அழித்து தமது விழுமியங்களை நிறுவிவரும் இத் தருனத்தில் இவ் விடையங்களை மூடிமறைத்து அழகிய சிறீலங்காவுக்கு உல்லாசப் பயணம் செய்யுங்கள் என விளம்பரங்களை மேற்கொள்ளுதலானது வண்மையாகக் கண்டிக்கப்படவேண்டியது.
கொடிய இன அழிப்பினால் பெரிதும் பாதிக்கப்பட்டு அழியாத வடுக்கழுடன் தொடர்ந்தும் விடுதலையை நோக்கி பயணித்துவரும் உலகத் தமிழ் மக்களின் உணர்வையும், அபிலாசைகளையும் மதிக்காது சற்றும் மனிதாபிமானமற்ற முறையில் சுவிஸ் நாட்டின் Traverhouse (SBB) எனும் அரச நிறுவனம் செயற்படுவதானது தமிழ் மக்களை முற்றிலும் அவமதிக்கும் செயற்பாடாகும்.
மிகக் குறுகிய காலத்தின் முன்னரே சுவிஸ் அரசாங்கம் போரினால் பாதிக்கப்பட்டு உயிர் ஆபத்துடன் சுவிஸில் அகதித் தஞ்சம் வேண்டி நிற்கும் எமது சக உறவுகளை திருப்பியனுப்பும் முடிவை எடுத்திருந்தது. சிறீலங்கா சார்ந்த நிலைப்பாட்டில் சுவிஸ் அரசாங்கத்திற்கு நிலவும் அறிவியற் பற்றாமையை எண்ணி நாம் வேதனையடைகிறோம்.
இதைத் தொடர்ந்து அடுத்த கட்டமாக மேற்கொள்ளப்பட்டுள்ள இச் செயற்பாடானது சுவிஸ் அரசாங்கத்தின் மீது பல சந்தேகங்களையும் கேள்விகளையும் எழவைத்துள்ளது. சிறீலங்கா அரசாங்கத்தின் தமிழின அழிப்புக்கு சுவிஸ் அரசாங்கம் உடந்தையாகச் செயற்படுவதையே இச் செயற்பாடுகள் எடுத்துக் காட்டுகின்றன.
இச் செயற்பாடுகளுக்கு எதிராக நாம் உடனடியாக கிழர்ந்தெழுந்து நாம் போராட்டங்களை மேற்கொள்ள வேண்டும். நாம் விழிப்படையவில்லையெனில் எம்மை நம்பி தாயகத்தில் வாழும் எமது உறவுகளுக்கு மிகப்பெரும் துரோகம் இழைக்கிறோம் . அத்துடன் சிறீ லங்கா அரசின் செயற்பாட்டை நாம் ஆதரிக்கிறோம் என்ற நிலைப்பாட்டை வேற்றின மக்கள் விளங்கிக்கொள்வார்கள.
இச் செயற்பாட்டை துளிகள் அமைப்பு வண்மையாகக் கண்டிப்பதுடன் எதிர்வரும் 16.12.2011 கவனயீர்பு போராட்டத்தை பிற்பகல் 17.00 மணியளவில் சுக் மாநில புகையிரதநிலையத்தில் ஏற்பாடு செய்துள்ளனர்.
அனைத்து மக்களும் அணி அணியாகத் திரளுமாறு உரிமையுடன் அழைக்கிறோம
துளிகள்

Exit mobile version