Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறீதரன் எம்.பி மீது போலிக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் மகிந்த பாசிசம்

யாழ் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரனின் அலுவலகத்தில் இருந்து 4 சீ வெடிமருந்துகள், ஆபாச இறுவட்டுகள், ஆணுறைகள் மீட்கப்பட்டதாக இலங்கைப் புலனாய்வுப் பிரிவினர் ஊடகங்களுக்கு செய்திகளை வழங்கியுள்ளனர்.
தேடுதலின் போது அரச ஆதரவு ஊடகவியலாளர் ஒருவர் மட்டுமே அனுமதிக்கப்பட்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு பாராளுமன்ற உறுப்பினரான சிறீதரன் மீதான பாலியல் மற்றும் பயங்கரவாதக் குற்றச்சாட்டுக்களை முன்வைக்கும் நோக்குடனேயே இலங்கை அரச உளவுத்துறையினர் இவ்வாறு நடந்துகொண்டுள்ளனர் என சந்தேகங்கள் தெரிவிக்கப்படுகின்றன.
இன்று இடம்பெற்ற விசாரணைகளின் பின் நாடாளுமன்ற உறுப்பிர் சிறிதரனின் செயலாளர்களில் ஒருவரான பொன்னம்பலம் லட்சுமி காந்தன் விடுவிக்கப்பட்டு உள்ளார். அலுவலகப் பொறுப்பாளரான 38 வயதுதுடைய அருணாசலம் வேளமாலிகிதன் கைது செய்யப்பட்டு அழைத்துச் செல்லப்பட்டு உள்ளார். இங்கு நடத்தப்பட்ட தேடுதலில் கணனிகள் – ஆவணக் கோவைகள் உள்ளிட்ட முக்கிய குறிப்புகள் எடுத்துச் செல்லப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று மகிந்த ராஜபக்ச பாசிசம் தன்னை மேலும் பலப்படுத்தும் நோக்கில் ஏனைய அரசியல் சக்திகளை அழித்துவருகின்றது. மக்கள் மூச்சுவிடக்கூட ராஜபக்சவின் அனுமதியைப் பெறவேண்டிய நிலையிலேயே காணப்படுகின்றனர்.
இந்த நிலையில் ராஜபக்ச பாசிச அரசோடு இனச்சுத்திகரிப்பு, சிறுபான்மைத் தேசிய இனங்கள் மீதான ஒடுக்குமுறை, பல்தேசிய சுரண்டல் ஆகியவற்றோடு உடன்படும் அமரிக்க அரசு, ராகபக்சவை கையாளும் எதிரணி ஒன்றையும் உருவாக்க முனைகிறது. இந்த எதிரணியில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு உட்பட்ட ஏனைய அரசியல் சக்திகள் இணைந்துகொள்ள நிர்பந்திக்கப்படுகின்றன. சம்பந்தரின் பாராளுமன்ற உரையில் இராணுவத்தை வட-கிழக்கிலிருந்து முழுமையாக வெளியேறக் கோரவில்லை என்பதன் அடிப்படையும் இதுவே.
ராஜபக்சவிற்கு எதிரான அணிதிரட்டலை அழிப்பதற்கு அதன் மிகப்பலவீனமான எதிரியான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு முதலில் குறிவைக்கப்படுகிறது. ராஜபக்சவிற்கும் அமரிக்காவிற்கும் இடையிலான மோதலில் யார் வெற்றிபெற்றலும் மக்கள் தோற்றுப்போனவர்களே.

Exit mobile version