Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது : பாலித கோகன்ன

சிறிலங்கா மீதான போர்க் குற்ற விசாரணைகள் தேவையற்றது என்று சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.
சிறிலங்காவில் நடைபெற்ற போரின் போது மேற்கொள்ளப்பட்ட மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொள்ளப்பட வேண்டும் என்று ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் கருத்து வெளியிட்டதை தொடர்ந்து சிறிலங்கா தனது கருத்தை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக கோகன்ன மேலும் தெரிவித்துள்ளதாவது:

சிறிலங்கா அரசாங்கமானது தனது முன்னணி நிலைப்பாட்டில் இருந்து மாறப்போவதில்லை. போர்க் குற்றம் தொடர்பான விசாரணைகள் தொடங்கப்படுவதை அது எதிர்க்கின்றது.

குற்றச்சாட்டுக்களுக்கான ஆதாரங்கள் தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் கருத்து வெளியிட்டிருப்பதும் எதிர்மறையானது என சிறிலங்காவின் வெளிவிவகாரத்துறைச் செயலாளர் பாலித கோகன்ன தெரிவித்துள்ளார்.

Exit mobile version