Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிறிலங்கா இராணுவ கப்டன் கனேடிய அதிகாரிகளிடம் அரச பயங்கரவாதம் குறித்து சாட்சியம்

இலங்கை இராணுவத்திலிருந்து வெளியேறி 2009 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் கனடாவில் அரசியல் தஞ்சம் கோரிய இலங்கை இராணுவத்தில் கப்டன் தரத்திலிருந்த ரவீந்துர வதுத்ர இலங்கை இராணுவத்தின் போர்க்குற்றங்கள், பயங்கரவாத நடவடிக்கைகள் குறித்த பல தகவல்களை வெளியிட்டுள்ளார் என கனடாவிலிருந்து வெளியாகும் நஷனல் போஸ்ட் என்ற பத்திரிகை தகவல் வெளியிட்டுள்ளது.

அந்த நேரத்தில் தமிழ் தேசிய கூட்டமைப்பு சேர்ந்த பாராளுமன்ற உறுப்பினராக இருந்த எம்.கே. சிவாஜிலிங்கம், வீட்டில் குண்டு பொருட்கள் வைக்குமாறு தனக்கு கேணல் ஒருவரால் உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக கனேடிய அதிகாரிகளிடம் கூறியுள்ளார். ரவீந்திரவிற்கு கனடாவில் அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளது. மனிதத்திற்கு எதிரான குற்றங்களுக்குத் துணைசென்றவர் என்ற அடிப்படையிலேயே அரசியல் தஞ்சம் மறுக்கப்பட்டுள்ளது.

சிறுபான்மைத் தமிழர்களுக்கு எதிராக சிறிலங்கா அரசுப் படைகளால் மேற்கொள்ளப்பட்ட சித்திரவதைகள், குற்றச்செயல்கள் குறித்து தனக்குத் தெரியும் என்று கனேடிய குடிவரவு அதிகாரிகளிடம் இவர் கூறியுள்ளார்.

Exit mobile version