பிரான்ஸ் சமூகப் பாதுகாப்பு அமைப்பு-CDS (Comité de Défense Social) ஒழுங்கு செய்திருந்த மே தின நிகழ்வு மிகச் சிறப்பாக பிரான்ஸில் நடைபெற்றது. இந் நிகழ்வின் பிரதான அரசியல் கோசங்கள் இலங்கை தேசிய இனப் பிரச்சனையை மையப்படுத்தியே அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பிரான்சில் செயல்படும் கட்சி சாரா இடதுசாரி அமைப்புத் தோழர்கள் கலந்துகொண்டு இலங்கை அரசின் அரச பயங்கரவாதத்திற்கு எதிராக தங்கள் குரல்களையும், கண்டனங்களையும் வெளிப்படுத்தினர் . சமூகப் பாதுகாப்பு அமைப்புத் தோழர்கள் கிறிஸ்தோபர், எத்தின், வீ, லியோன், ஜோன், எமிலி, ரமணன், வரதன், அசோக் யோகன், மற்றும் தோழர்கள் குமரன், அசோக் பிரகாஸ், மோகன், சிறீ, ஜெயா, குணேஸ், விஸ்வா முதலியோர் கலந்துகொண்டு இந் நிகழ்வை வழிநாடத்தி சிறப்பித்தனர்.