நல்லனவற்றைச் சொல்லும்போது குறைபாடுகளையும் சொல்லியே ஆகவேண்டும். வழமையாக தமிழர்களுக்கே சொந்தமான, தமிழர்களின் நிகழ்வுகளிலேயே பெரும்பாலும் இடம்பெறும் நேரம் தவறுகின்றமை இங்கும் இடம்பெற்றது. நூல் வெளியீட்டு அழைப்பிதழில் நிகழ்வு தொடங்கும் நேரம் மாலை 5 மணி என்று இருந்தபோதும் மாலை
அதனைத் தொடர்ந்து ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ மற்றும் ‘கடவுளின் நிலம்’ ஆகிய இரு நூல்களினதும் வெளியீடு நடைபெற்றது. அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன் நூலின் முதற் பிரதியை எழுத்தாளர் தம்பு சிவா வழங்க, சைவமுன்னேற்றச் சங்கத்தின் நிறுவுனர் திரு.வி.ஆர்.ராமநாதன் அவர்கள் பெற்றுக்கொண்டார். கடவுளின் நிலம் நூலின் முதற் பிரதியை அந்நூலின் பதிப்பாளர் திரு.ஜீவகுமாரன் வழங்க, எழுத்தாளர் திரு.உதயணன் அவர்கள் பெற்றுக் கொண்டார். முதற் பிரதிகள் வழங்கப்பட்டதை தொடர்ந்து சிறப்புப் பிரதிகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, ஆய்வாளர் திரு.சூ.யோ.பற்றிமாகரன், முன்னாள் கிழக்குப் பல்கலைக்கழக கலைப் பீடாதிபதி பேராசிரியர் திரு.பாலசுகுமார் , எழுத்தாளர் திரு.தம்பு சிவா, பதிப்பாளர் – எழுத்தாளர் திரு.ஜீவகுமாரன், ஈழவர் திரைக்கலை மன்ற நிறுவுனர் பாரிஸ்டர் திரு.ஜோசப் ஆகியோரின் சிறப்பான உரைகள் இடம்பெற்றன. ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்ற நூலினை விடவும் ‘கடவுளின் நிலம்’ நூலே அனேகமானவர்களை கவர்ந்துள்ளது என்பதை உரையாற்றிய பலரது கருத்துகளிலும் இருந்து உணர முடிந்தது. ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்ற பெயர் நீளமானதாகவும் நெருடலாகவும் உள்ளதாக ஒருசிலர் அபிப்பிராயப்பட்டனர். முன்னர் ஒருமுறை அனஸ் உடன் உரையாடும்போது ‘கடவுளின் நிலம்’ என்ற நூலுக்கு ‘விபச்சாரத்தின் நிறம் சிவப்பு’ என்றே தலைப்பு வைத்திருந்ததாகவும் இறுதி நேரத்தில் அதனை மாற்றி ‘கடவுளின் நிலம்’ என்று வைத்ததாகவும் சொல்லியிருந்தார்.
நல்லவேளை அவர் தலையங்கத்தை மாற்றிவிட்டார் என்று நினைத்துக்கொண்டேன். ‘அண்ணை நான் தற்கொலை செய்யப்போகிறேன்’ என்பதே நெருடலாக இருக்கும்போது ‘விபச்சாரத்தின் நிறம் சிவப்பு’ என்று வைத்திருந்தால் நூல் வெளியீட்டுக்கு யாரும் வந்திருக்க மாட்டார்கள். இறுதியாக திரு.அனஸ் அவர்களின் நன்றி உரையோடு நிகழ்வு சிறப்பாக நிறைவடைந்தது. நிகழ்வு முடிவடைந்ததும் வருகைதந்த அனைவருக்கும் சிறந்த இரவு விருந்தும் வழங்கப்பட்டது இன்னும் சிறப்பு. இப்படியான நூல்கள் தொடர்ந்து வெளிவருவதும், நூல் வெளியீட்டு நிகழ்வுகள் நடைபெறுவதும், பலதரப்பட்ட பிரமுகர்கள் அவற்றில் கலந்து கொள்வதும் புலம்பெயர் தமிழ்பேசும் சமூகங்களுக்கு மிகவும் ஆரோக்கியமாக அமையும்.