Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரிய கிளர்ச்சிக் காரர்களுக்கு மேலதிக பணம் வழங்கும் பிரித்தானிய அரசு

சிரியாவில் கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கான உதவிகளை பிரித்தானியாக இரட்டிப்பாக உயர்த்தியுள்ளது.
ஜனாதிபதி பஷர் அல் அசாட்டிற்கு எதிராக கிளர்ச்சியில் ஈடுபட்டு வரும் தரப்பினருக்கு இதுவரையில் வழங்கப்பட்டு வந்த உதவிகளை இரண்டு மடங்காக உயர்த்துவது என பிரித்தானியா தீர்மானித்துள்ளது.
கிளர்ச்சியாளர்களுக்கு மேலதிகமாக 500000 ஸ்ரெலிங் பவுண்ட்கள் உதவியாக வழங்கப்பட உள்ளது என வெளிவிவகார அமைச்சர் வில்லியம் ஹேக் தெரிவித்துள்ளார்.
இஸ்லாமிய அடிப்படை வாதிகளைப் பெரும்பான்மையாகக் கொண்ட இந்தக் கிளர்ச்சியாளர்கள் மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டுவருவதாக கடந்தவாரம் ஜேர்மனியப் பத்திரிகை ஒன்று தெரிவித்துள்ளது. கிளர்ச்சியாளர்களில் ஒருவரின் நேர்காணலும் பிரசுரிக்கப்பட்டிருந்தது.

Exit mobile version