சிரியாவில் ஆர்ப்பாட்டங்களில் இஸ்லாமிய அடிப்படைவாத ஆயுதக் குழுக்கள் பெரும்பாலும் காணப்படுவதாகத் தெரிவித்திருந்தார். அதே வேளை அல் கயிதா பாணியிலான ஆயுதக் குழுக்களே ஆர்ப்பட்டக் காரர்களோடு இணைந்து ஆயுதத் தாக்குதல்களை மேற்கொள்வதாகத் தெரிவித்திருந்தது. இஸ்லாமிய அடிப்படைவாதக் குழுக்களுக்குத் தாம் உதவியோ ஆயுதங்களோ வழங்கவில்லை என அமரிக்காவும் மேற்கும் இதுவரை தெரிவித்து வந்தன. நேற்று செவ்வாயன்று பாராளுமன்றத்தில் நடைபெற்ற விவாததின் போது 2 மில்லியன் பிரித்தானிய பவுண்ஸ் பணத்தை ஆயுதமாகவும் பணமாகவும் சிரியாவில் அரச எதிர்ப்புக் குழுக்களுக்கு வழங்கியதாக பிரித்தானிய பிரதமர் டேவிட் கமரோன் ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஆயுதங்களையும் பண உதவியையும் உதவி நிறுவனங்கள் என்ற பெயரில் வழங்கியதாக அவர் மேலும் தெரிவித்தார். சிரியாவின் சர்வாதிகார ஆட்சிக்கு எதிரான மக்கள் போராட்டத்தில் இரத்தக் களரியை உருவாக்கி ஆயுதங்களை நாடுமுழுவதும் விதைத்த மேற்கு நாடுகள் மக்களின் இரத்த வெள்ளத்தில் எண்ணைப் உறிஞ்சிக் கொள்கின்றன.