சிரிய அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகின்றது என்று அமரிக்க அரச கொலைப்பட்டாளங்கள் கூறுவது அப்பட்டமான பொய் என்று டெக்சாஸ் மானிலத்தின் காங்கிரஸ் பிரதிநிதி ரொன் போல் கூறியுள்ளார். வெற்றிபெற்றுக்கொண்டிருக்கும் ஆசாத் அரசு இரசாயன ஆயுதங்களைப் பிரயோகிப்பதற்கான எந்தக் காரணங்களும் ஆதாரங்களும் இல்லை என அவர் மேலும் கூறியுள்ளார்.
‘நாங்கள் அங்கு என்ன செய்து கொண்டிருக்கிறோம், ஏன் நாங்கள் அங்கு இன்னும் தொடர்கிறோம், எப்படி அங்கிருந்து வெளியேறப்போகிறோம்’ இதுதான் தனது கேள்விகளும் துயரமும் எனக் குறிப்பிடுகிறார்.