இதன் பின்னராக அங்கு சென்ற சுயாதீன ஊடகவியலாளர்கள் அதிர்ச்சித் தகவல்களை வெளியிட்டனர். கொலைசெய்யப்பட்டவர்களின் உறவினர்கள், அப்பகுதியில் கொலைகளை நேரில் கண்டோரின் சாட்சிகளை அவர்கள் பெற்றுக்கொண்டனர். 25ம் திகதி மே மாதம் அல் அக்ஷ் இனக் குழுவைச் சேர்ந்த அரச எதிர்ப்புப் படையினர் மக்கள் தொழுகை முடிந்ததும் சோதனை சாவடி ஒன்றைத் தாக்கத் தொடங்கினர். பின்னர், மாலை 15.30 மணியளவில் அல் ஹோலக் இனக் குழுவைச் சேர்ந்த மற்றொரு குழுவினர் இன்னொரு சோதனைச் சாவடியைத் தாக்க ஆரம்பித்தனர். முதலில் நகருக்குள் நுளைந்தவர்கள் சிறைக்கைதிகளை கொலை செய்தனர். பின்னர் அல் ஹோலா நகருக்குள் நுளைந்தவர்கள் பெண்கள், முதியோர் குழந்தகள் என்று அனைத்து சிரிய அரச ஆதரவு குடும்பங்களையும் கொன்றனர்.
கொலைசெய்த குழுக்களுக்கு பிரித்தானியா உட்பட மேற்கின் அரசுகள் உதவி பெருந்தொகையான பண உதவி செய்வதாக முன்னமே ஒப்புதல் வழங்கியிருந்தன.
ஐக்கிய நாடுகளின் சமாதான தூதுக்குழுவினர் சிரியாவிற்கு செல்லத் திட்டமிட்டிருந்த நிலையில் இத் தாக்குதல்கள் அமரிக்கா உட்பட்ட மேற்கு நாடுகளின் கட்டளையின் அடிப்படையிலேயே நடைபெற்றிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.