தென்கிழக்கு துருக்கியில் எண்ணற்ற சட்டவிரோத ஆயுதங்களின் நகர்வுகளை காணக்கூடியதாக உள்ளதாக அந்தத நாட்டின் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
ஆயுதங்களையும் வெடிமருந்துகளையும் சிரியா நாட்டின் முஸ்லீம் சகோதரத்துவ நெட்வொர்க் மற்றும் பிற குழுக்களின் உதவியுடன் சிரியாவினுள் கடத்தப்படுவதாக கூறப்படுகிறது. பயங்கரவாத்த்தின் மீதான யுத்தம் என்ற தலையங்கத்தில் அமரிக்கா நாடுகளை ஆக்கிரமித்துக்கொண்டது. துருக்கியின் எண்ணை வளத்தை ஒட்டச் சுரண்டும் நோக்கோடு முன்னர் அமரிக்கா பயங்கரவாதக் குழுக்கள் எனப் பிரகடனப்படுத்தி யுத்தம் நடத்திய அதே குழுக்களுக்கு ஆயுதங்களை இன்று ஆயுதங்களை வழங்குகின்றது.
இந்தக் குழுக்கள் சாரிசாரியாக அப்பாவி மக்களைக் கொலைசெய்துவிட்டு சிரிய அரச படைகளின் மீது பழி சுமத்துவதாக அண்மையில் வெளியான பல ஆய்வுகள் தெரிவிக்கின்றன.
அமரிக்காவின் அடியாள் நிறுவனங்களான ஐக்கிய நாடுகள் சபை, மனித உரிமை அமைப்புக்கள், ஊடகங்கள் இந்தக் கொலைக் குழுக்களுக்கு ஆதரவான பிரச்சாரங்களை மேற்கொள்கின்றன.