பிரித்தானியா, பிரான்ஸ், அமரிக்கா போன்ற நாடுகள் பெருந்தொகைப் பணத்தை சிரிய அரசிற்கு எதிராகப் போராடுவதாகப் பிரச்சரம் செய்த ‘ஜனநாயகவாதிகளுக்கு’ வழங்கிவந்தது. 11ம் திகதி ஏப்ரல் மாதம் லூ மொந் பத்திரிகையில் வெளியான கட்டுரை ஒன்றில் சிரியாவில் அரசுக்கு எதிராகப் போராடும் குழுக்களின் பிரதான குழு அல்கையிதாவுடன் தொடர்புடைய ஜப்ஹாத் அல் நோர்சா என்ற பயங்கரவாதக் குழு என்ற தகவலை வெளியிட்டுள்ளது. சிரியவில் இஸ்லாமிய அடிப்படைவாதிகளின் போர்க்குற்றமும் செயற்பாடுகளும் வெளித்தெரிய ஆரம்பித்தவுடன் ஐரோப்பிய ஆக்கிரமிப்பு யுத்தங்களை ஆதரித்த கிரிமினல் ஊடகங்கள் ஆங்காங்கே தகவல்களை வெளியிட ஆரம்பித்துள்ளன.
ஈராக் அல் கையிதா குழு சிரிய குழுவுடன் இணைந்து செயற்படப்போவதாக ஈராக் அல் கையிதா தலைவர் ஒலி நாடா ஒன்றை வெளியிட்டுள்ளார். இதுவரை சிரியாவில் ஜனநாயகத்தை மீட்பதற்கு இக்குழுக்களுக்கு பணம், ஆயுதம் மற்றும் பிரச்சார உதவிகளை வழங்கிவருவதாகக் கூறி மக்களைத் தவறாக ஊடகங்கள் வழி நடத்தின. சிரியாவில் மட்டுமன்றி உலகின் ஒவ்வொரு மூலையிலும் போரைக் கட்டவிழ்த்துவிட வெறியோடலையும் இந்த நாடுகளின் நரபலிக்கான அடுத்த குறி ஆசிய நாடுகளே என எதிர்வு கூறப்ப்படுகின்றது.