Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரியாவிற்கு எதிரான ஜெனீவா தீர்மானமும் அமரிக்கப் பயங்கரவாதமும்

நடைபெற்று வரும் ஐ.நா மனித உரிமைச் சபைக் கூட்டத் தொடரில் சிரியா விவகாரம் முக்கிய விடயமாக விவாதிக்கப்பட்டு வந்தநிலையில் இன்று வியாழக்கிழமை காலை இடம்பெற்ற அமர்வின் போது சிரியாவின் மனித உரிமை மீறல்கள் தொடர்பிலான தீர்மானமொன்று சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிரிய அரசுத் தலைவர் பஸார் அல் – அஸாட் தலைமையிலான சிரியா அரசாங்க மனித உரிமை மீறல்களுக்கு கண்டனம் தெரிவித்து இந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
சிரியாவுக்கு எதிரான இந்த கண்டன பிரேரணையை ஆதரித்து 37 நாடுகள் வாக்களித்ததுடன் ரஸ்யா, சீனா, கியூபா ஆகிய மூன்று நாடுகள் எதிர்த்து வாக்களித்தன.
இந்தியா, பிலிப்பைன்ஸ் உள்ளிட்ட மூன்று நாடுகள் வாக்களிப்பில் கலந்து கொள்ளவில்லை.
முன்னை நாள் அமரிக்க ஆதரவு நாடான சிரியாவில் எண்ணை வளத்தைக் கொள்ளையடிப்பதற்காக உலகெங்கும் பயங்கரவாததை விதைக்கும் அமரிக்க அரசு சிரிய அரசுத் தலைவருக்கு இணையாக பயங்கரவாததைக் கட்டவிழ்த்து விட்டுள்ளது. சிரியாவில் எதிர்ப்புப் போராட்டம் நிகழ்த்துவது என்ற போர்வையில் இஸ்லாமிய அடிப்படை வாதிகளை அமரிக்கா ஆயுதமயமாக்கி வருகிறது என்ற குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. அல் – கயிதா போன்ற அமைப்புக்கள் எதிர்ப்புப் போராட்டத்தில் ஈடுபடுவதாகவும் அவை தமது பயங்கரவாதப் பட்டியலில் காணப்படுவதாகவும் கிலாரி கிளிங்டன் இப்போது ஒப்புதல் வாக்குமூலம் வழங்கியுள்ளார். இதே வேளை இனக்கொலையாளி ராஜபக்சவுடன் அமரிக்க அரசு தொடர்ச்சியான பேச்சுக்கள் நடத்தி வருவதாக தகவலறிந்த வட்டாரங்கள் தெரிவித்தன. அமரிக்க அரசின் நிகழ்ச்சி நிரலின் அடிப்படையில் செயற்படும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜெனீவா கூட்டத்தில் கலந்து கொள்ளாமை குறிப்பிடத்தக்கது.

Exit mobile version