Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

CIA சிரியப் பயங்காவாதிகளுக்கு ஜோர்டானில் பயிற்சியளிக்கின்றது

free-syrian-armyஅமரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ சிரியாவில் கிளர்ச்சிசெய்வதாகக் கூறும் பயங்கரவாதிகளுக்குப் பயிற்சியளிப்பதாகவும் ஒபாமா சிரிய எதிர்க்கட்சிகளுக்கு ஆயுதம் வழங்க்க வேண்டும் என்று அறிவிப்பதற்கு நீண்டகாலத்திற்கு முன்னமே இப்பயிற்சி ஆரம்பித்துவிட்டதாகவும் நேற்று வெள்ளியன்று வெளியான லோஸ் எஞ்சல்ஸ் டைம்ஸ் செய்தி வெளியிட்டுள்ளது.

20 இலிருந்து 45 வரையான இஸ்லாமியப் பயங்கரவாதிகளை ஜோர்டானிலுள்ள பாலைவனப் பகுதியில் அமரிக்க உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ கடந்த நவம்பர் மாதத்திலிருந்து பயிற்றுவிக்கிறது என்ற தகவலை லோஸ் எஞ்ஜல்ஸ் ரைம்ஸ் வெளியிட்டுள்ளது. ஒபாமாவின் வெள்ளை மாளிகையும் மத்திய உளவு நிறுவனமான சீ.ஐ.ஏ உம் சிரியாவில் இரத்தக்களரியைத் தோற்றுவிக்கும் பயங்கரவாதிகளைப் பயிற்றுவிப்பது குறித்த இந்தச் செய்தி குறித்து கருத்துக்கூற மறுத்துவிட்டன.

அமரிக்காவினால் பயிற்சியளிக்கப்பட்ட சிரியப் பயங்கரவாதி ஒருவர் சர்வாதிகாரி அசாத் இன் இராணுவச் சிப்பாய் ஒருவரின் இருதயத்தை உணவாக உட்கொண்ட காட்சி உலகத்தை அதிரவைத்தமை அறிந்ததே.

சிரியாவில் கிளர்ச்சிகளை மேற்கொள்ளும் அமரிக்கப் ஆதரவுப் பயங்கரவாதிகள் படு தோல்வியடைந்துள்ள நிலையில் ஒபாமா நிர்வாகம் மேலும் பயங்கர அழிவு ஆயுதங்களை வழங்கவுள்ளது. தமக்கு அதி சக்திவாய்ந்த அழிவு ஆயுதங்கள் கிடைக்கவுள்ளதாக சுதந்திர சிரிய இராணுவத்தின் பேச்சாளரான லூவே முக்தாத் ஏ.எப்.பி செய்தி முகவர்களிடம் தெரிவித்துள்ளார்.

உலகம் முழுவதும் போராட்டங்களையும் மக்களையும் அழித்து தனது அதிகாரத்தை நிறுவுவதற்கான அமரிக்க அரச பயங்கரவாதம் உலகின் ஒவ்வொரு மூலைகளிலும் கட்டவிழ்த்துவிடப்படுகின்றது. நிக்கரகுவாவில் மக்கள் ஆதரவுடன் நடைபெற்ற போராட்டத்தை அழிப்பதற்கு அமரிக்க அரசு பயங்கரவாதக் குழுக்களுக்கு வெளி-ப்படையாகவே பயிற்சியளித்தது. ஈழத்தில் இனப்படுகொலை நடத்துவதற்கு நேரடியாகவும் தனது தெற்காசியப் பங்காளி நாடான இந்தியாவின் ஊடாகவும் அமரிக்கா பங்களித்தது. பின்னதாக அமரிக்க சார்பு புலம்பெயர் தமிழர்கள் சிலரையும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பையும் தமிழ்ப்பேசும் மக்களின் தலைமையைக் கையளித்து இலங்கை அரசு இனச்சுத்திகரிப்பை தொடர்வதற்கான சூழலை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய அரச அடியாள் படைகள் ஒருபுறமும், அமரிக்க அரச படைகள் இன்னொருபுறமும் ஒன்றை ஒன்று முரண்படுவது போல வளர்த்துக்கொள்கின்றன.

Exit mobile version