Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிரச வலையமைப்பு தலைமையகம் மீது தாக்குதல்!

கொழும்பு, கொம்பனித் தெரு பிறேபுரூக் பிளேசிலுள்ள சிரச வலையமைப்பு தலைமை அலுவலகம் மீது சற்று முன்னர் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. கங்காராமை பக்கமிருந்து வந்த 30 பேர் கொண்ட பிரதி அமைச்சர் ஒருவரின் ஆதரவாளர்கள் கற்களை வீசி இத்தாக்குதலை நடத்தியுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

இதனையடுத்து தற்பாதுகாப்புக் கருதி அலுவலக ஊழியர்கள் அக்கற்களால் மீண்டும் குண்டர்களை நோக்கி வீசியுள்ளனர். குண்டர்களால் வீசப்பட்ட கற்களால் அலுவலகக் கண்ணாடிகள், சொத்துக்கள் மட்டுமன்றி, அங்கு நிறுத்தி வைக்கப்பட்டிருந்த வாகனங்களும் சேதமடைந்துள்ளன.

சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் தற்போது அங்கு பாதுகாப்புக் கடமையில் ஈடுபட்டுள்ளனர். சம்பவம் தொடர்பில் இதுவரை 16 பேரை பொலிஸார் கைது செய்துள்ளதாக சிரச வலையமைப்பு எமக்கு உறுதி செய்துள்ளது.

சிரச தொலைக்கட்சி அலுவலகத்தில் சம்பவம் நடைபெற்ற சமயம் 250 பேர்வரை கடமையில் ஈடுபட்டிருந்ததாக அவ்வலையமைப்பு மேலும் தெரிவித்தது.

Exit mobile version