பிரித்தானியத் தமிழர்கள் வாக்குப்பலத்தைக் குறிப்பிடத்தக்களவில் கொண்டிருக்கும் மிச்சம்-மோடன் பகுதி பாராளுமன்ற உறுப்பினரான சியோபான் மக்டொனா போராட்டத்திற்க்குத் தனது ஆதரவைத் தெரிவித்துவந்தவர்.
போராட்ட இளைஞர்கள் தம்மை ஐக்கியநாடுகள் சபைக்கு அழைத்துச்செல்ல உறுதி வழங்கினால், போராட்டத்தைக் கைவிடுவது தொடர்பாகப் பரிசீலிப்பதாகத் தெரிவித்தனர்.
மக்டொனா எந்த உறுதியான பதிலையும் கூறமுடியாதிருந்தும் தான் ஆவன செய்வதாக உறுதியளித்ததாக பீ.பீ.சி செய்திநிறுவனத்திற்க்குக் கூறியுள்ளார்.
மிச்சம் பாராளுமன்ற உறுப்பினர் ஆவன செய்வதாக வழங்கிய உறுதியைத் தொடர்ந்து நீர் அருந்தி உண்ணாவிரதத்தைத் தொடரும் இப் போராளிகளின் உடல்நிலை கவலைக்கிடமாகலாம் என முன்னதாக காவற்துறை மருத்துவர்கள் அறிவித்திருந்தனர்.
உண்ணாவிரதிகள் தாம் புலி ஆதரவாளர்கள் எனக் கூறிய போதிலும் தமது அடிப்படைநோக்கம், போர்நிறுத்தத்தை வலியுறுத்துவதே எனவும் பீ.பீ.சி இற்குத் தெரிவித்தனர்.
சிவதர்சன் (21) பரமேஸ்வரன்(28) ஆகிய இருவருமே பிரித்தானியா தலையிட்டு போரைநிறுத்தும் வரை சாகும் வரை உண்ணாவிரதம் மேற்கொள்ளப் போவதாகத் மேலும் தெரிவித்தனர்.
உண்ணாவிரதிகளில் ஒருவரான பரமேஸ்வரன் 3 வாரங்களுக்கும் முன்னரே பிரித்தானியாவிற்க்கு வந்திருந்தார் என்பதும் இங்கு குறிப்பிடத்தக்கது.