Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சினிமாக் கூத்தாடிக்கு பிறந்த நாள் காணும் ஈழப் போர் ஈன்ற யாழ்ப்பாண இளைஞர்கள்

rajini_birthday-02தமிழ்ப்பேசும் மக்களின் கலையும் பண்பாட்டு விழுமியங்களும் முப்பது வருட ஆயுதப் போராட்டங்களின் ஊடாக புதிய முன்னேறிய நிலையை நோக்கி வளர்ச்சியடையவில்லை. புலம்பெயர் நாடுகளில் வாழும் ஊதாரிகளின் பிறந்த நாள் கொண்டாட்டங்களும், பூப்புனித நீராட்டு விழாக்களும், குடியும் கும்மாளமும் பின் தங்கிய சமூகம் ஒன்றைப் பிரதிபலிக்கின்றது. தேசிய ஊடகங்கள் என்ற பெயரில் பாலியல் வக்கிரங்களை வெளியிட்டுவிட்டு இலங்கையில் கலாச்சாரம் சீரழிகிறது என்று முனகும் வியாபாரிகளுக்கு மத்தியில் யாழ்ப்பாணத்திலும் ரஜனி என்ற தென்னிந்திய சினிமாக் கூத்தாடியின் பிறந்த நாள் கொண்டாடப்பட்டுள்ளது.

புலம்பெயர் நாடுகளில் அரசியல் தலைமை என்று கூறும் கோமாளிகள் நாளுக்கு ஒரு நினைவு தினத்தையோ பிறந்த நாளையோ கண்டுபிடித்துவிடுவார்கள். மக்களை அரசியல் மயப்படுத்தவும் போராடக் கற்பிக்கவும் தயாரற்ற இக்கும்பல்களின் முன்னுதாரணம் ஈழத்தில் சினிமாக் கூத்தாடிகளின் பிறந்த நாளாக பின்பற்றப்படுகின்றது.

தென்னிந்திய சினிமாக் கூத்தாடிகளைக் தலைவர்களாக வழிபடும் அவலம் ஈழத்தில் உருவாகி வருகிறது. ஈழப் போராட்டத்தை தென்னிந்தியாவில் முடக்கி வைத்திருக்கும் வியாபாரிகளின் ஆதிக்கம், சினிமாக் கூத்தாடிகளின் செல்வாக்கு என்பன அதிகார வர்க்கத்தின் வெற்றி; ஒடுக்கப்படும் மக்களின் தோல்வி.

சிதைந்து சீரழிக்கப்படும் புதிய இளைய சமூகத்தின் பின்னணியில் தேசிய ஊடகங்கள் என்று கூறிக்கொண்டு பாலியல் வக்கிரங்களை விதைக்கும் புலம்பெயர் மஞ்ச்ள் ஊடகங்களின் பங்கும் மறுக்க முடியாததே.

ரஜனிக்குப் பிறந்த நாள் கொண்டாடுபவர்களின் சிந்தனையைத் தீர்மானிப்பதில் இவை அனைத்தும் பங்கு வகிக்கின்றன.

ரஜினிகாந்தின் திருட்டுக் காட்சிகளில் மூழ்கிப் போகும் ஈழம் : எம்.ரிஷான் ஷெரீப்

Exit mobile version