Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிநோடென் வேட்டையில் அமரிக்க அரசு தீவிரம்

Edward-Snowdenதனி மனிதனாக அமரிக்க மக்களின் பொது அபிப்பிராயத்தை மாற்றிய எட்வார்ட் சினோடெனை கைது செய்து சிறையிலடைத்து துரோகிப் பட்டம் சூட்டுவதிலேயே அமரிக்க அரசு கவனம் செலுத்தி வருகிறது. அமரிக்க தேசியப் பாதுகாப்பு ஆணையகத்தின் சட்டவிரோத நடவடிக்கைகளை மக்களுக்கு வெளிப்படுத்திய சிநோடெனுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக்கூடாது என எக்குவாடோர் அரசுடன் அமரிக்க அரசு பேச்சுவார்த்தை நடத்திவருகிறது.
அமரிக்க அரசு தனது மக்களுக்கு எதிரான கிரிமினல் நடவடிக்கைகள் குறித்து மூச்சுக்கூட விடாத நிலையில் சிநோடெனை வேட்டையாடுவதிலேயே தனது முழுக் கவனத்தையும் செலுத்திவருகிறது. கியூபா, வெனிசூலா ஆகிய நாடுகளையும் சிநோடெனுக்கு அரசியல் தஞ்சம் வழங்கக்கூடாது எனக் கேட்டுக்கொண்டுள்ளது. எக்குவடோரியன் அதிபர் சிநோடென் இன்றைய நிலையில் கடவுச்சீட்டு எதுவுமற்ற நிலையிலேயே காணப்படுவதால் அவர் எக்குவாடோரிற்கு பயணம் செய்ய முடியாத நிலையிலுள்ளார். என்று குறிப்பிட்டுள்ளார். எக்குவடோரியன் தூதரகம் ஒன்றில் அரசியல் தஞ்ச்ம் கோரினால் அதுகுறித்துத் தாம் பரிசீலிக்க முடியும் என அவர் ஊடகங்களுக்குத் தெரிவித்தார்.

Exit mobile version