Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சித்த சுவாதினமான மூன்றுவயதுக் தமிழ்க் குழந்தையை நாடுகடத்தும் பிரித்தானிய அரசு

bfபிரித்தானியாவில் பிறந்த 3 வயது குழந்தையை பிரித்தானிய அரசு நாளை  (26.09.2013)நாடுகடத்துகின்றது. மனநலக் குறைவான இக்குழந்தையை அவரது தாய் தந்தையர்களுடன் இலங்கையை நோக்கி நாடுகடத்துகின்றது. வழக்குரைஞர்களின் கருத்துப்படி கடந்தவருடம் குழந்தையுடன் பெற்றார்களை நாடுகடத்த முற்பட்டபோது நடைபெற்ற சம்பவங்களால் குழந்தையின் மனோ நிலை தீவிரமாகப் பாதிக்கப்பட்டுள்ளது என்றனர். இலங்கை அரசின் மனித உரிமை ஆணயகத்தின் அறிக்கையின் அடிப்படையில் குழந்தையின் தகப்பன் பயங்கரவாத சந்தேக நபர் என்றும், நீதிமன்றப் பிடியாணை பிறப்பிக்கப்பட்ட நிலையிலுள்ளார் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆக, இலங்கைக்கு அனுப்பப்படும் நிலையில் இவர் கைதாவார் என்று தெரிந்தும் பிரிதானிய அரசு இவரை நாடுகடத்துகிறது. தகப்பன் பல தடவைகள் தற்கொலை செய்ய முயற்சித்துள்ளார் எனத் தெரிவிக்கப்படுகின்றது.
பாதுகாப்புக் கருதி பெயர்கள் வெளியிடப்படவில்லை. பிரித்தானிய அரசின் பதிவிலக்கம் Z1084763/7 கீழ் இவர் தடுத்து வைக்கபட்டுள்ளார்.
அரசியல் தஞ்சம் நிராகரிக்கப்பட்ட நிலையிலேயே பிரித்தானியா இவர்களை நாடுகடத்துகிறது.
Please email the home office (mayt@parliament.uk, pscorrespondence@cabinet-office.gsi.gov.uk, and CITTO@homeoffice.gsi.gov.uk) and demand that this deportation be stopped.
Please also contact Sri Lankan Airlines and demand that they use their discretion not to fly the passengers. They are booked on flight UL504. You can contact them on reservations@srilankan.com, customer@srilankan.aero or + 94 77777 1979
இத்தகவல்களை The Sri Lanka Campaign என்ற அமைப்பு வெளியிட்டுள்ளது.
கம்யூனிச நாடுகளிலிருந்து தப்பிவரும் கிரிமினல்களுக்கும் பணக்காரர்களுக்கும் அடைக்கலம் கொடுப்பதற்காக தோற்றுவிக்கப்பட்ட ஜெனீவா அகதிகள் ஒப்பந்தம் பின்னர் மலிவான கூலிகளைப் பெற்றுக்கொள்வதற்காகவும் வேறுபல நோக்கங்களுக்காகவும் பயன்படுத்தப்பட்டது. புரட்சிகரச் சிந்தனை கொண்டவர்களைப் பாதுகாப்பக உள்வாங்கி மேற்கு நாடுகளின் பொருளாதாரச் சிறைக்குள் அடைத்து வைப்பதற்காக அண்மைக் காலங்களில் இது பயன்பட்டது. இலங்கை அரசு ஜனநாயக முற்போக்கு சிந்தனை கொண்டவர்களை முளையிலேயே கிள்ளியெறியும் வலிமை கொண்டுள்ள இன்றைய நிலையில் இலங்கையின் அகதிகளை உள்வாங்கும் நோக்கம் பிரித்தானிய அரசிற்கு இன்று இல்லை.

Exit mobile version