Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சித்திரவதைக்கு உள்ளான பல்கலைக்கழக மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றம்

கைது செய்யப்பட்டு வவுனியாவில் தடுத்து வைக்கப்பட்டிருந்த யாழ். பல்கலைக்கழகத்தைச் சேர்ந்த 7 மாணவர்கள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 4 மாணவர்கள் வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கிறார்கள் என்று அவர்களது உறவினர்கள் கூறுகின்றனர்.
பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத் தலைவர் வி.பவானந்தன், ஒன்றியச் செயலாளர் ப.தர்ஷானந்த், கலைப்பீட மாணவர் ஒன்றியத் தலைவர் க.ஜெனமேஜெயந்த், விஞ்ஞான பீட மாணவன் எஸ்.சொலமன் ஆகிய நால்வருமே பயங்கரவாத விசாரணைப் பிரிவினரின் வவுனியா அலுவலகத்தில் இருந்து வெலிக்கந்தை தடுப்பு முகாமுக்கு மாற்றப்பட்டிருக்கின்றனர் என்று தெரிவிக்கப்படுகின்றது.
இதேவேளை, விடுதலைப்புலிகள் அமைப்பு மீண்டும் தலைத்தூக்க ஒருபோதும் இடமளிக்க போவதில்லை எனவும் போராட்டம் நடத்துபவர்களைப் புனர்வாழ்வு முகாம்களுக்கு அனுப்பிவைக்கப் போவதாகவும் இனப்படுகொலையின் சூத்திரதாரிகளில் ஒரிவரான கோதாபயராஜபக்ச தெரிவித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
தமிழ்ப் பேசும் மக்கள் மீதான ஒடுக்குமுறையுன் ஒவ்வொரு பகுதிகளும் சந்தர்ப்பவாத அரசியல் வியாபாரிகள் கையகப்படுத்தியுள்ள நிலையில் கோதாபய போன்ற பயங்கரவாதிகள் தாம் விரும்பியதை நிறைவேற்றும் நிலையில் உள்ளனர்.

Exit mobile version