Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

‘சிங்கள’ வர்த்தகர்களை நெருக்கடிக்கு உள்ளாக்கதீர்கள் – ரனில்

இலங்கையில் பேரினவாதக் கட்சிகளில் ஒன்றான ஐக்கிய தேசியக் கட்சி தனது பங்களிப்பை இனவாதத்திற்கு வழங்கிவருகிறது.

சிங்கள வர்த்தகர்களுக்கு நெருக்கடிகளை ஏற்படுத்துவதனை விடுத்து புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
சர்வதேச ரீதியில் புலிகளுக்கு காணப்படும் சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டும்.
வர்த்தக முயற்சியில் ஈடுபட்டுள்ள சிங்கள வர்த்தகர்களை துன்புறுத்தாது, புலிகளின் சொத்துக்களை பறிமுதல் செய்ய சட்டம் இயற்றப்பட வேண்டும்.
கட்சியின் தலைமையகம் சிறிகொத்தாவில் நடைபெற்ற நிகழ்வு ஒன்றின் போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
போரின் போது சொத்துக்களை இழந்தவர்களுக்கும் போரினால் இடம்பெயர்ந்த மக்களுக்கும் நிவாரணங்களை வழங்குவதற்கு புலிகளின் சொத்துக்களை பயன்படுத்த முடியும்.

Exit mobile version