Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள மக்கள் எமது கோரிக்கைகளை ஏற்றுக்கொண்டுள்ளனர் : சம்பந்தன்

rsampanthanஒன்றிணைந்த நாட்டுக்குள் இறைமை, சுயநிர்ணய உரிமை, பாதுகாப்பு ஆகியவற்றுடன் கூடிய ஓர் தீர்வையே நாம் வேண்டி நிற்கிறோம். அதற்கு மேல் நாம் எதனையும் கேட்கவில்லை.

எமது கோரிக்கைகளையும், அபிலாஷைகளையும் சிங்கள மக்களில் பெரும்பான்மையானோர் ஏற்றுக்கொண்டுள்ளனர். சிங்கள மக்கள் எம்மை நேசிக்கின்றனர். எங்களுக்கு தீர்வைத் தர தயாராக உள்ளனர். ஆனால் அரசியல் தலைவர்கள் தமது சுயநலனுக்காகவும், தமது பதவிகளுக்காகவும் எமது உரிமைகளைத் தர மறுக்கின்றனர். விடுதலைப் புலிகளை பல நாடுகள் ஒன்று சேர்ந்தே அழித்திருந்தன. புலிகள் இன்று இருந்திருந்தால் வடக்கு, கிழக்கில் இட்மபெற்றுவரும் பல்வேறு கெடுபிடிகள் ஏற்படுவதற்கு வாய்ப்பிருந்திருக்காது என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.

சமகால அரசியலும், இன்றைய தமிழ் மக்களின் நிலைப்பாடுகளும் என்னும் பொருள்பற்றியும் வாக்காளர் பதவுகள் பற்றியும் திருகோணமலை சில்வெஸ்டர் ஹோட்டலில் நேற்று ஞாயிறு காலை, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர் க.துரைரட்ணசிங்கம் தலைமையில் நடைபெற்ற விசேட கூட்டத்திலேயே இரா.சம்பந்தன் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

Exit mobile version