சிங்கள மக்களின் இன்றைய பிரதான எதிரி மகிந்த ராஜபக்ச அரசாங்கமே. மகிந்த அரசு 2009 ஆம் ஆண்டு இனப்படுகொலை நிகழ்த்திய காலத்திலிருந்து மூன்று தடவைகள் அப்பாவி சிங்கள மக்களின் அமைதிப் போராட்டங்கள் மீது துப்பாக்கிப் பிரயோகம் செய்துள்ளது. இதே போல தமிழ் இஸ்லாமியர்களுக்கு எதிரான போர் ஒன்றை மகிந்த அரசு பிரகடனப்படுத்தியுள்ளது. இவ்வாறு முழு இலங்கையினதும் எதிரியான மகிந்த என்ற பாசிஸ்டின் முன்னையில் சத்தியப் பிரமாணம் செய்துகொண்டதை நல்லிணக்கம் என கூச்சலிடுகின்றது ஒரு கும்பல். மகிந்தவுடனான நல்லிணக்கம் தமிழ்ப் பேசும் மக்களுக்கு மட்டுமல்ல சிங்கள மக்களுக்கும் எதிரானதுதான். மகிந்த பாசிசத்தால் ஒடுக்கப்படும் சிங்கள மக்கள் தமிழ்ப் பேசும் மக்களின் போராட்டத்தின் நியாயத்தை உணர ஆரம்பித்த நிலையில் விக்னேஸ்வரன் கும்பல் அவர்களை எதிரிகளாக்கும் கைங்கரியத்தைச் செய்துகொண்டிருக்கிறது.
முஸ்லிம் தமிழர்களைக் காட்டிக்கொடுக்கிறது.
இதனை எல்லாம் மூடிமறைக்கும் தமிழ் அரசியல் அடிமைகள் விக்னேஸ்வரனின் காட்டிக்கொடுப்பை நல்லிணக்கம் என்கின்றனர். ஏற்கனவே காட்டிக்கொடுப்பிற்குப் பழக்கப்பட்டுப் போன கே.பி அல்லது குமரன் பத்மனாதன் என்ற சர்வதேச கிரிமினல் விக்கினேஸ்வரன் ஜனாதிபதியின் முன்நிலையில் சத்தியப் பிரமாணம் எடுத்துக்கொண்டது இலங்கை அரசு, சகோதர சிங்கள மக்கள் மத்தியிலும் வரவேற்கத்தக்க முன்னுதாரணமாக உள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்.
ராஜபக்சவினால் ஒடுக்கப்படும் பெரும்பான்மை சிங்கள மக்களையும்,மலையக மற்றும் முஸ்லீம் மக்களையும் நல்லிணக்கத்தோடு இணைந்து போராட அழைக்கும் அரசியல் தலைமை தேசிய இன ஒடுக்குமுறைக்கு உள்ளாக்கப்படும் தமிழ்ப் பேசும் மக்கள் மத்தியில் வெற்றிடமாக இருப்பது துயர்தருவதே.