இலங்கையின் பேருவளை பகுதியில் உள்ள ஹோட்டலுக்குள் பிரவேசித்த பௌத்தபிக்குமார் அங்கு தாக்குதலை நடத்தியுள்ளனர்.
குறித்த ஹோட்டலில் புத்தரின் பெயரில் விருந்து ஒன்று இடம்பெற்றதாக தெரிவித்தே இந்த தாக்குதல் நடத்தப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பொதுபல சேனா என்ற இலங்கையின் பௌத்த அமைப்பினரே இந்த தாக்குதலை நடத்தியுள்ளனர்.
எனினும் புத்தரின் பெயரில் எவ்வித விருந்துகளும் தமது ஹோட்டலில் இடம்பெறவில்லை என்று ஹோட்டல் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
இந்த சம்பவத்தின் போது ஹோட்டல் நிர்வாகத்துக்கும் பௌத்த பிக்குகளுக்கும் இடையில் தீவிரமான முறுகல் நிலை ஏற்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.