Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்கள அதிகாரவர்க்கத்திடம் ஒட்டிக்கொள்வதை நல்லிணக்கம் என்கிறார் சம்பந்தன்

sampanthan-sumanthiranபுதிய சூழலில் நடைபெறும் சுதந்திரதினம் தமிழ் மக்களுக்கு நன்மை பயக்கும் என்ற நம்பிக்கையிலேயே சுதந்திரதின நிகழ்வுகளில் கலந்துகொண்டதாக தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவரும் பராளுமன்ற உறுப்பினருமான இரா. சம்பந்தன் தெரிவித்துள்ளார்.
வடகிழக்கில் வாழ்பவர்களுக்கும் தெற்கில் வாழ்பவர்களுக்கும் இடையில் நல்லிணக்கம் ஏற்பட வேண்டும் என்பதைச் சுட்டிக்காட்டவே சுதந்திரதினத்தில் கலந்துகொண்டதாக அவர் குறிப்பிட்டார்.

இலங்கையின் சுதந்திரதினம் என்பது சிங்கள அப்பாவி மக்களையும்கூட ஒடுக்கும் கருவியாகும். பிரித்தானிய அரசு தனது அடிமைகளான அதிகாரவர்க்கத்திடம் இலங்கையை ஒப்படைத்த நாளே இச் சுதந்திரதினம். சம்பந்தன் அந்த அதிகாரவர்க்கத்திடமே நல்லிணக்கத்தை எதிர்பார்க்கிறார். நல்லிணக்கம் என்பது சிங்கள் ஒடுக்கப்படும் மக்களுக்கும் சுய நிர்ணைய உரிமைக்காகப் போராடும் தமிழ்ப் பேசும் மக்களுக்கும் இடையே மட்டும் தான் ஏற்பட வேண்டும்.

ஒடுக்குமுறையாளர்களுடன் தமிழ்த் தேசியத்தின் பேரால் ஏற்படுத்தப்படும் நல்லிணக்கம் மேலும் அழிவுகளையே ஏற்படுத்தும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, தமிழ்த் தேசிய மக்கள் முன்னணி போன்ற கட்சிகள் தேசியத்தின் பெயரால் நடத்தும் வியாபாரம் இலங்கையின் தரகு முதலாளித்துவ, பேரினவாத அதிகாரவர்க்கத்தின் நலன்களையே உறுதிப்படுத்தும்.

Exit mobile version