Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்களத்தில் தேசிய கீதம் இசைத்த வாசுதேவ நாணயக்காரவின் நிகழ்வு

தேசிய மொழிகள் மற்றும் சமூக ஒருமைப்பாட்டு அமைச்சின் ஏற்பாட்டில் நேற்று யாழ். வீரசிங்கம் மண்டபத்தில் இடம்பெற்ற “உறவுப் பாலம்” நிகழ்வில் சிங்கள மொழியில் தேசிய கீதம் இசைக்கப்பட்டது. இந்த அமைச்சுக்குப் பொறுப்பான அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தேசியக் கொடியை ஏற்றிய சமயமே இவ்வாறு தேசிய கீதம் ஒலித்தது.
இன ஐக்கியத்தை ஏற்படுத்தும் முகமாக நேற்று மாலை இடம்பெற்ற இந்த நிகழ்வில் வடக்கு மற்றும் தெற்கைச் சேர்ந்த இலக்கிய வாதிகள், எழுத்தாளர்கள், ஊடகவியலாளர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, “வடக்கு கிழக்கில் தேசிய கீதத்தை சிங்கள மொழியில் பாட வேண்டும் என்ற கட்டாயம் இல்லை. தமிழ் மொழியில் தாராளமாகப் பாடலாம்” என்று பொது நிர்வாக உள்நாட்டு அமைச்சர் ஜோன் சென விரத்ன நாடாளுமன்றில் அண்மையில் கூறியிருந்ததும் குறிப்பிடத்தக்கது.
நேற்றைய நிகழ்வில் அமைச்சின் உயர் அதிகாரிகள், யாழ். அரச அதிபர் திருமதி இமெல்டா சுகுமார், யாழ்ப்பாணத்திலுள்ள இந்திய துணைத் தூதரக அதிகாரி எவ்.மகாலிங்கம் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.
வாசுதேவ நாணயகார சில இலங்கைத் தமிழர்களின் அழைப்பில் பிரான்சில் நடைபெற்ற ஒன்றுகூடல் ஒன்றில் கௌரவிக்கப்பட்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Exit mobile version