Site icon Indian News | SriLankan Tamil News | Articles |

சிங்களத்தில் தேசிய கீதம் : இலங்கை அரசைக் கண்டிக்கும் கருணாநிதி

தமிழக முதல்வர் கருணாநிதி இலங்கையில் தேசிய கீதம் சிங்களத்தில் பாடப்படுவது குறித்த முடிவை எதிர்த்துள்ளார். வன்னிப்படுகொலைகள் நடைபெற்ற காலத்தில் இலங்கை அரசுடன் கருணாநிதி இணைந்து செயற்பட்டமை அறியப்பட்டதே இந்த நிலையில் இவ்வறிக்கை தேர்தலுக்கான நாடகமாகவே கருதப்படுகிறது. தவிர, நேற்றய தினம் டக்ளஸ் தேவானந்த இவ்வாறான முடிவுகள் ஏதும் எடுக்கப்படவில்லை எனவும் அவை தவறு என மகிந்த ராஜபக்சவிற்கு சுட்டிக்காட்டியதாகவும் குறிப்பிட்டுள்ளார். அவர் தெரிவித்த கருத்துக்களுக்கு மாறானதாக நிலைமைகள் காணப்படுகின்றன.
“இலங்கையில் தமிழ் மக்களும்,சிங்களவர்களும் வசிப்பதால் அந்த நாட்டு தேசிய கீதத்தை சிங்களம் மற்றும் தமிழ் ஆகிய இரண்டு மொழிகளிலும் இதுவரை பாடப்பட்டு வந்தது.
இந்த நடைமுறையை இலங்கை அதிபர் ராஜபக்சே மாற்றி, இனிமேல் சிங்கள மொழியில் மட்டுமே தேசிய கீதம் பாடப்படும் என்றும் தமிழில் தேசிய கீதம் பாடுவதை ரத்து செய்து விட்டதாகவும் அதற்கான தீர்மானம் அமைச்சரவையிலும் நிறைவேற்றப்படிருப்பதாகவும் ஏடுகளில் செய்தி வந்துள்ளது.
அந்த செய்தி உண்மையானால் அது வன்மையாக கண்டிக்கத்தக்கது. புண்பட்டிருக்கின்ற ஈழத்தமிழர்களின் உள்ளத்தை மேலும் புண்படுத்தக் கூடியது. எனவே இந்த செயலை கண்டிக்கிறேன்.” என்றார் கருணாநிதி.

Exit mobile version